அமெரிக்க போர் விமானங்களுக்கு அனுமதி மறுத்தது ஏன்? - இலங்கை அதிபர் திசாநாயக்க விளக்கம்

அமெரிக்க போர் விமானங்களுக்கு அனுமதி மறுத்தது ஏன்? - இலங்கை அதிபர் திசாநாயக்க விளக்கம்
Updated on
1 min read

கொழும்பு: மார்ச் மாத தொடக்கத்தில், இலங்கையின் மட்டால சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கா தனது இரண்டு போர் விமானங்களைத் தரையிறக்குவதற்கான கோரிக்கையை இலங்கை நிராகரித்தது என்று அந்நாட்டின் அதிபர் அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

செங்கடலுக்கும் ஏடன் வளைகுடாவுக்கும் இடையிலான ஒரு முக்கிய கடல்வழி நுழைவாயிலான ஜிபூட்டியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் போர் விமானங்களிடமிருந்து மார்ச் 4 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இலங்கையில் தரையிறங்குவதற்கான கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அவை இரண்டுமே அந்நாட்டு அரசால் மறுக்கப்பட்டன.

இதுகுறித்து இலங்கையின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் அநுர குமார திசாநாயக்க, “பல அழுத்தங்கள் இருந்தபோதிலும் நாங்கள் நடுநிலைமையைக் கடைப்பிடிக்க விரும்புகிறோம்.

நாங்கள் எந்த சர்வதேச அழுத்தத்துக்கும் பணிய மாட்டோம். இப்போது மத்திய கிழக்கு முழுவதும் போர் சவால்கள் நிறைந்துள்ளன. ஆனால் நடுநிலையாக இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்வோம்.

ஜிபூட்டியில் உள்ள தளத்திலிருந்து எட்டு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளுடன் இரண்டு போர் விமானங்களை மட்டால சர்வதேச விமான நிலையத்திற்குக் கொண்டுவர அவர்கள் விரும்பினர். ஆனால், இதுகுறித்த கோரிக்கையை நாங்கள் மறுத்துவிட்டோம்" என்று அவர் கூறினார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால், புவிசார் அரசியல் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், எந்த அணியிலும் சேராமல் எச்சரிக்கையுடன் இருக்க இலங்கை மேற்கொள்ளும் முயற்சியை இந்த மறுப்பு எடுத்துக்காட்டுகிறது.

அமெரிக்க போர் விமானங்களுக்கு அனுமதி மறுத்தது ஏன்? - இலங்கை அதிபர் திசாநாயக்க விளக்கம்
அமெரிக்காவின் சக்தி வாய்ந்த எஃப்-35 போர் விமானத்தை தாக்கியதாக ஈரான் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in