ஆப்கனில் உள்ள ராணுவ மையம், சுரங்கம் மீது தாக்குதல் நடத்தினோம்: பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தகவல்

பாக். போர் விமானங்கள் குண்டு வீசியதில், காந்தகாரின் டாமன் மாவட்டத்தில் சேதமடைந்த கட்டிடத்தில் கிடந்த குண்டு துகள்களை தலிபான் படையினர் காட்டுகின்றனர்.

பாக். போர் விமானங்கள் குண்டு வீசியதில், காந்தகாரின் டாமன் மாவட்டத்தில் சேதமடைந்த கட்டிடத்தில் கிடந்த குண்டு துகள்களை தலிபான் படையினர் காட்டுகின்றனர்.

Updated on
1 min read

இஸ்லாமாபாத்: பாகிஸ்​தானில் நடை​பெறும் தீவிர​வாத சம்​பவங்​களுக்கு தெஹ்ரிக்​-இ-தலி​பான்​கள் தான் காரணம் என்​றும் இவர்களுக்கு ஆப்​கானிஸ்​தான் அடைக்​கலம் கொடுப்​ப​தாகவும் பாகிஸ்​தான் குற்​றம் சாட்​டு​கிறது. ஆனால் இதை ஆப்கானிஸ்தான் மறுக்​கிறது. இந்த விவ​காரம் காரண​மாக பாகிஸ்​தான் - ஆப்கானிஸ்​தான் எல்​லை​யில் கடந்த சில வாரங்களாக மோதல் நடை​பெறுகிறது.

இந்​நிலை​யில் கடந்த வெள்​ளிக்கிழமை இரவு பாகிஸ்​தானின் ராவல்​பிண்​டி​யில் உள்ள ராணுவ தலை​மையகம் உட்பட 3 இடங்கள் மீது ஆப்​கானிஸ்​தான் ட்ரோன் தாக்​குதல் நடத்​தி​யது. அவற்றை பாகிஸ்​தான் ராணுவம் தகர்த்​தது. தலி​பான்​கள் பொது​மக்​களை குறி​வைத்து தாக்​குதல் நடத்​து​வதற்கு சரி​யான பதிலடி கொடுக்​கப்​படும் என பாகிஸ்​தான் அதிபர் ஆசிப் அலி ஜர்​தாரி கூறி​யிருந்​தார்.

அதன்​படி ஆப்​கானிஸ்​தானின் தென்​பகு​தி​யில் உள்ள ராணுவ மையங்​கள், மலைப்​பகு​தி​யில் உள்ள தலி​பான் தீவிர​வா​தி​களின் மறை​விடங்​கள் ஆகிய​வற்றை குறி​வைத்து பாகிஸ்​தான் நேற்று விமானம் மூலம் குண்டு வீசி​யது. தலி​பான் தலை​வர் ஹிபதுல்லா அகுந்​ஜடா ஆகியோர் இருக்​கும் காந்​த​காரில் உள்ள தொழில்​நுட்ப கருவி​கள் மையம், கிடங்​கு​கள் ஆகிய​வற்​றின் மீது தாக்​குதல் நடத்தப்​பட்​டன.

காந்​த​காரில் ஆப்​கன் தலி​பான்​கள், மற்​றும் பாகிஸ்​தானின் தெஹ்ரிக் இ தலி​பான்​கள் பயன்​படுத்​தும் சுரங்​கங்​கள் மீதும் பாகிஸ்​தான் விமானப்​படை தாக்​குதல் நடத்​தி​யது. காந்​த​காரில் பாகிஸ்​தான் போர் விமானங்​கள் இரவு நேரத்​தில் தாக்​குதல் நடத்தி​ய​தாக​ காந்​த​கார் மக்​கள் தெரி​வித்​தனர்.

இதுகுறித்து தலி​பான் அரசின் செய்தி தொடர்​பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் கூறுகை​யில், ”காபூல், காந்​த​கார், பக்​திகா ஆகிய இடங்​களில் மக்​கள் வசிக்​கும் பகு​தி​களில் பாகிஸ்​தான் விமானங்​கள் குண்டு வீசின. இதில் பலர் இறந்​தனர். காந்​த​காரில் போதைப் பொருள் மறு​வாழ்வு மையம் மற்​றும் காலி கன்​டெய்​னர் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. தாக்​குதல் நடத்​தி​ய​தாக பாகிஸ்​தான் கூறும் ராணுவ மையங்​கள் எல்​லாம் வெகு தொலை​வில் உள்​ளன” என்​றார்.

இந்​தியா கண்​டனம்: ஆப்​கன் மீது பாகிஸ்​தான் நடத்​திய தாக்குதலுக்கு இந்​தியா கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. இது குறித்து இந்திய வெளி​யுறவுத் துறை செய்தி தொடர்​பாளர் ரந்​திர் ஜெய்ஸ்வால் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், ”ஆப்​கானிஸ்​தானில் மக்​கள் வசிக்​கும் பகு​தி​யில் பாகிஸ்​தான் தாக்​குதல் நடத்​தி​ய​தில் மக்​கள் பலர் உயி​ரிழந்​ததற்கு இந்​தியா கண்​டனம் தெரிவிக்​கிறது. இது பாகிஸ்​தானின் இன்​னொரு அத்​து​மீறல். ஆப்​கானிஸ் ​தானின் இறை​யாண்மை முழு​மை​யாக மதிக்​கப்​பட வேண்​டும்​ என இந்தியா வலியுறுத்​துகிறது” என்​றார்​.

<div class="paragraphs"><p><em>பாக். போர் விமானங்கள் குண்டு வீசியதில், காந்தகாரின் டாமன் மாவட்டத்தில் சேதமடைந்த கட்டிடத்தில் கிடந்த குண்டு துகள்களை தலிபான் படையினர் காட்டுகின்றனர்.</em></p></div>
ஒடிசா காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக 2 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in