நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் 81-வது ஐ.நா. பொதுச் சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றினார்.
அப்போது அவர், காசாவில் ஹமாசுக்கு எதிரான போர் மற்றும் ஈரான், சிரியா, லெபனான் மற்றும் ஏமன் நாடுகளில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தி பேசினார்.
காசா, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை, சிரியா, லெபனான், ஈரான், ஏமனின் ஹவுதிகள் மற்றும் ஈராக்கில் உள்ள போராளிக் குழுக்கள் உட்பட 7 முனைப் போரில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், “நாங்கள் வெற்றி பெறப் போகிறோம். எங்களுக்கு வேறு வழியில்லை” என தெரிவித்தார்.
நெதன்யாகுவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. சபை பிரதிநிதிகள் பலரும் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் நெதன்யாகுவை கண்டித்து கோஷமிட்டபடி வெளியேறினர். அதே நேரத்தில் சபையில் இருந்த இஸ்ரேல் ஆதரவாளர்கள் எழுந்து நின்று கைகளை தட்டினர். இதனால் சபையில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.