எத்தியோப்பியாவில் எரிமலை வெடிப்பு: சாம்பல் மேகங்களால் விமான சேவை பாதிப்பு

எத்தியோப்பியாவில் எரிமலை வெடிப்பு: சாம்பல் மேகங்களால் விமான சேவை பாதிப்பு
Updated on
1 min read

அடிஸ் அபாபா: எத்தியோப்பியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் சுமார் 12,000 ஆண்டுகளில் முதல் முறையாக ஹெய்லி குப்பி எரிமலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வெடித்தது. இதனால் வானில் சுமார் 14 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பலும், மேகங்களில் புகையும் சூழ்ந்தது. இதன் காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

அடிஸ் அபாபாவில் இருந்து சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அபார் பகுதியில் அமைந்துள்ள ஹெய்லி குப்பி எரிமலை வெடித்தது. இதன் எரிமலை தொடர்ந்து பல மணி நேரமாக வெடித்து சிதறியது. இதைத்தொடர்ந்து சாம்பலும், மேகங்களை புகை மண்டலமும் சூழ்ந்தன. இந்த சாம்பல் சூழ் மேகங்கள் ஏமன், ஓமன், இந்தியா மற்றும் வடக்கு பாகிஸ்தான் பகுதியை சூழ்ந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த விவரங்களை எத்தியோப்பியா அரசு அதிகாரிகள் உறுதி செய்யாமல் உள்ளனர்.

எரிமலை சாம்பல் ஆலோசனை மையம் எத்தியோப்பியாவில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பு குறித்தும், அதனால் மேகங்களில் சாம்பல், மேகங்களில் புகை சூழ்ந்ததை உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பாதையில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை விமான நிறுவனங்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை டிஜிசிஏ மற்றும் இந்திய விமான நிலைய ஆணையமும் தெரிவித்துள்ளன. நிலைமை சீராகும் வரை விமான நிலையங்கள் கவனமுடன் விமான போக்குவரத்தை கையாளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in