ஜவுளி தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தால் வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை, கலவரம்

ஜவுளி தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தால் வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை, கலவரம்
Updated on: 
2 min read

டாக்கா: ஜவுளி தொழிலாளர்​களின் தொடர் போராட்​டங்​களால் வங்​கதேசத்​தில் மீண்​டும் வன்முறை, கலவரம் ஏற்​பட்​டிருக்​கிறது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை வங்​கதேச பிரதம​ராக ஷேக் ஹசீனா பதவி வகித்​தார். அவரது ஆட்​சிக் காலத்தில் ஜவுளி துறை செழித்​தோங்​கியது. சர்​வ​தேச ஜவுளி ஏற்றுமதியில் சீனா​வுக்கு அடுத்து வங்​கதேசம் 2-ம் இடத்​தைப் பிடித்​தது.

அந்த நாடு முழு​வதும் 4,000-க்​கும் மேற்​பட்ட ஆயத்த ஆடை ஜவுளி ஆலைகள் செயல்​பட்டு வந்​தன. சுமார் 40 லட்​சம் தொழிலா​ளர்​கள் ஜவுளி துறை​யில் பணி​யாற்​றினர். 150-க்​கும் மேற்​பட்ட நாடுகளுக்கு ஆயத்த ஆடைகள் ஏற்​றுமதி செய்​யப்​பட்டு வந்​தன. கடந்த 2024-ம் ஆண்​டில் மாணவர்​களின் போராட்​டத்​தால் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்​தி​யாவில் தஞ்​சமடைந்​தார். இதன்​பிறகு முகமது யூனுஸ் ஆட்சி கடந்த பிப்​ரவரி வரை நீடித்​தது. பின்னர் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று தாரிக் ரஹ்​மான் பிரதம​ராகப் பதவி​யேற்​றார். தாரிக் ரஹ்​மான் அரசும் இந்​தி​யா​வுக்கு எதிரான மோதல் போக்கை கடைப்​பி​டித்து வரு​கிறது.

ஷேக் ஹசீனா ஆட்​சிக் காலத்​தில் இந்​தி​யாவில் இருந்து தர​மான பருத்​தியை வங்​கதேசம் இறக்​குமதி செய்து வந்​தது. கடந்த சில ஆண்​டுகளாக இந்​திய பருத்தி இறக்​குமதி நிறுத்​தப்​பட்டு உள்​நாட்டு பருத்​தி​யில் ஆயத்த ஆடைகள் தயாரிக்​கப்​பட்​டன. தரம் குறைந்த வங்​கதேச பருத்​தி​யால் வெளி​நாட்டு ஏற்​றுமதி கணிசமாக குறைந்​து​விட்​டது.

அமெரிக்கா, ஈரான் போரால் வங்​கதேசத்​தில் பெட்​ரோல், டீசல், எரிவாயு தட்​டுப்​பாடு ஏற்​பட்டு உள்​ளது. எரிசக்தி தட்​டுப்​பாடு காரண​மாக வங்​கதேச மின் உற்​பத்தி முடங்கி, நாள்​தோறும் 16 மணி நேரம் வரை மின் தடை ஏற்​படு​கிறது. இக்காரணங்​களால் வங்​கதேசம் முழு​வதும் 1,000-க்​கும் மேற்​பட்ட ஜவுளி ஆலைகள் மூடப்​பட்டு உள்​ளன. லட்​சக்​கணக்​கான தொழிலா​ளர்​கள் வேலையிழந்து உள்​ளனர்.

இந்த சூழலில் வங்​கதேச ஜவுளி ஆலை தொழிலா​ளர்​கள் வேலை​வாய்ப்பு மற்​றும் ஊதிய உயர்வு கோரி தொடர் போராட்​டங்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். தலைநகர் டாக்கா, காஜிபூர், அஷுலியா, சாவர் உள்​ளிட்ட நகரங்​களில் ஜவுளி தொழிலா​ளர்​களின் போராட்டத்​தால் மிகப்​பெரிய அளவில் வன்​முறை, கல​வரம் வெடித்​திருக்​கிறது.

டாக்​கா​வில் நேற்று முன்​தினம் போலீ​ஸாருக்​கும், தொழிலாளர்களுக்​கும் இடையே மிகப்​பெரிய மோதல் ஏற்​பட்​டது. போலீ​ஸார் தடியடி நடத்​தி​யும், கண்​ணீர் புகைக்​குண்​டுகளை வீசியும் கூட்​டத்தை கலைத்​தனர். போலீஸ் வாக​னங்​கள் தீ வைத்து எரிக்​கப்​பட்​டன. அங்​குள்ள நெடுஞ்​சாலை மூடப்​பட்டு உள்ளது. வன்​முறை, கல​வரம், போராட்​டங்​கள் நீடித்​தால் வங்கதேசத்​தில் மீண்​டும் ஆட்சி மாற்​றம் ஏற்​பட வாய்ப்பிருக்கிறது என்று சர்​வ​தேச அரசி​யல் நோக்​கர்​கள் தெரிவித்​துள்​ளனர்.

முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அண்​மையில் தனியார் தொலைக்​காட்​சிக்கு அளித்த பேட்​டி​யில், “விரைவில் வங்கதேசத்துக்கு திரும்​புவேன்” என்று பகிரங்​க​மாக அறி​வித்​தார். இதை சுட்​டிக் காட்​டியுள்ள வங்​கதேச தேசி​ய​வாத காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள், ஹசீனாவின் அவாமி லீக் கட்​சி​யினர் வன்​முறை, கல​வரத்​தைத் தூண்டி வரு​வ​தாக குற்​றம் சாட்டி வருகின்றனர்.

ஜவுளி தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தால் வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை, கலவரம்
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வினாத்தாள் கட்டணம் வசூலிக்கத் தடை: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

X