ஈரான் மீது தாக்குதல் நடத்த 1,000 ஏவுகணைகள் தயார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

Updated on
1 min read

வாஷிங்டன்: “ஈ​ரான் என்னை கொலை செய்ய முயன்​றால் அந்​நாட்​டின் மீது பயங்கர தாக்​குதல் நடத்த 1,000 ஏவு​கணை​கள் தயார் நிலை​யில் உள்​ளன” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை படு​கொலை செய்ய ஈரான் புது திட்​டம் வகுத்​துள்​ள​தாக இஸ்​ரேல் எச்​சரிக்கை விடுத்​த​தாக 2 நாட்​களுக்கு முன்​னர் தகவல் வெளி​யானது. இதை உறுதி செய்​யும் வகை​யில் ஈரான் முன்​னாள் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி கமேனி​யின் இறு​திச் சடங்​கில் பங்​கேற்​றவர்​கள், ட்ரம்ப்பை கொல்​வோம் என்ற பேனருடன் ஊர்​வலம் சென்​றனர்.

இதுகுறித்து நியூ​யார்க் போஸ்ட் நாளிதழுக்கு அதிபர் ட்ரம்ப் அளித்த பேட்​டி​யில், ‘‘இஸ்​ரேல் எந்த புதிய உளவுத் தகவலும் அளிக்​க​வில்​லை. நான் நீண்ட கால​மாக ஈரானின் இலக்​குப் பட்​டியலில் இருக்​கிறேன்” என்​றார். இந்​நிலை​யில் அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்​தில் கூறி​யிருப்​ப​தாவது:

ஈரான் என்னை படு​கொலை செய்ய முயன்​றால், அந்த நாட்​டின் மீது 1,000 ஏவு​கணை​கள் பாய தயார் நிலை​யில் உள்​ளன. ஈரானுக்கு எதி​ராக இதற்கு முன் இல்​லாத அளவில் மிகக் கடுமை​யான ராணுவத் தாக்​குதல் நடத்த அமெரிக்கா ஏற்​கெனவே அனு​மதி அளித்​துள்​ளது.

இந்த ஆரம்​பக்​கட்ட தாக்​குதலைத் தொடர்ந்து மேலும் ஆயிரக்​கணக்​கான ஏவு​கணை​களை ஈரான் மீது ஏவ அமெரிக்க ராணுவம் தயா​ராக உள்​ளது. ஈரானின் அனைத்​துப் பகு​தி​களை​யும் அழிப்​ப​தற்​கான இந்த உத்​தர​வு, ஓராண்டு அமலில் இருக்​கும். அதற்​குப் பின்​பும் நீட்​டிக்​கப்​படலாம்.

அமெரிக்கா​வுடன் பேச்​சு​வார்த்​தையைத் தொடர ஈரான் விரும்​பு​கிறது. ஆனால் போர் நிறுத்​தம் முடிவுக்கு வந்​து​விட்​ட​தாக ஈரானிடம்​ அமெரிக்​​கா தெரி​வித்​துள்​ளது. இவ்​​வாறு அதிபர்​ ட்​ரம்​ப்​ கூறி​யுள்​ளார்​.

<div class="paragraphs"><p>அமெரிக்க அதிபர் ட்ரம்ப்</p></div>
இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள்: நியூஸிலாந்து தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in