‘ஃபெண்டானில்’ கடுமையான தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்: அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப்
Updated on
1 min read

வாஷிங்டன்: ஃபெண்டானிலை ஒரு பேரழிவு ஆயுதமாக வகைப்படுத்தும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார். இந்த செயற்கை ஓபியாய்டு ஒரு கடுமையான தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்ட அவர், போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிராகத் தீவிரமான நடவடிக்கை எடுக்கப் போவதாக சபதம் செய்தார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில், “இன்று நான் கையெழுத்திடும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிர்வாக உத்தரவின் மூலம், ஃபெண்டானிலை ஒரு பேரழிவு ஆயுதமாக நாங்கள் வகைப்படுத்துகிறோம். ஃபென்டானில் செய்யும் பேரழிவை எந்த வெடிகுண்டும் செய்வதில்லை.

ஃபெண்டானில் காரணமாக நமக்குத் தெரிந்தவரை ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முதல் மூன்று லட்சம் பேர் இறக்கின்றனர். அமெரிக்கக் குடும்பங்கள் மீதான இதன் தாக்கம் பேரழிவை ஏற்படுத்துகின்றன. அமெரிக்காவின் எதிரிகள் ஃபென்டானிலை அமெரிக்காவுக்குள் கடத்துகிறார்கள், ஏனென்றால் அவர்கள் அமெரிக்கர்களைக் கொல்ல விரும்புகிறார்கள்.

சமீபத்தில் அமெரிக்காவில் பெரிய அளவிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மே மாதத்தில், அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய ஃபெண்டானில் பறிமுதலை நாங்கள் மேற்கொண்டோம். அப்போது ஒரே நேரத்தில் மூன்று மில்லியன் ஃபெண்டானில் மாத்திரைகளைப் பறிமுதல் செய்தோம். கடந்த மாதம் கொலராடோவில் மேலும் 1.7 மில்லியன் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

நாட்டுக்குள் எல்லை வழியாக வரும் ஃபெண்டானில் அளவு 50 சதவீதம் குறைந்துள்ளது. இந்தப் பணியில் சீனா எங்களுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. ஃபெண்டானிலுக்கு முறையான மருத்துவப் பயன்கள் இருந்தாலும், சட்டவிரோத உற்பத்தி மற்றும் கலப்படம் அதை ஒரு கொடிய பேரழிவு ஆயுதமாக மாற்றிவிட்டது. நீங்கள் ஃபெண்டானிலை சில பொருட்களுடன் கலக்கும்போது, ​​அது மோசமானதாகிவிடுகிறது. மெக்சிகோவில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

ஃபெண்டானில் குறித்த இந்த உத்தரவு, நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடையது. போதைப்பொருள் கும்பல்கள் அமெரிக்காவுக்கு நேரடி ராணுவ அச்சுறுத்தலாக உள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப்
நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல், சோனியாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ஏற்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in