ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் அமெரிக்க போரில் இணைய தயாராகும் ஐக்கிய அரபு அமீரகம்

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் அமெரிக்க போரில் இணைய தயாராகும் ஐக்கிய அரபு அமீரகம்
Updated on
1 min read

துபாய்: ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடி​யுள்ள ஈரானுக்கு எதிரான அமெரிக்க போரில் இணைய யுஏஇ தயா​ராகி வருவ​தாகக் கூறப்​படு​கிறது. அமெரிக்​க-இஸ்​ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்​கும்வகை​யில், ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் மூடி உள்​ளது.

இந்த சூழ்​நிலை​யில், ஹார்​முஸ் ஜலசந்​தியை திறப்​ப​தற்​காக ஈரானுக்கு எதி​ராக போரிடும் அமெரிக்கா மற்​றும் பிற நட்பு நாடு​களு​டன் ஐக்​கிய அரபு அமீரகம் (யுஏஇ) இணை​யத் தயா​ராகி வரு​வ​தாகக் கூறப்​படு​கிறது. வால் ஸ்ட்​ரீட் ஜர்​னல் செய்தி அறிக்​கை​யின்​படி, இத்​தகைய ராணுவ நடவடிக்​கைக்கு அனு​மதி அளிக்​கும் வகை​யில் ஐக்​கிய நாடு​கள் பாது​காப்பு சபை​யில் தீர்​மானம் கொண்டு வர யுஏஇ அழுத்​தம் கொடுத்து வரு​கிறது.

ஹார்​முஸ் ஜலசந்​தியை பலவந்​த​மாகத் திறக்க ஒரு கூட்டணியை உரு​வாக்​கு​மாறு அமெரிக்​கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடு​களின் ராணுவ சக்​தி​களை யுஏஇ தூதர்கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். அமெரிக்க கடற்படையின் ஐந்​தாவது படைப்​பிரிவு அமைந்​துள்ள பஹ்ரைன், இந்த அமெரிக்​கத் தீர்​மானத்​துக்கு ஆதரவு அளிக்​கிறது. இது குறித்த வாக்​கெடுப்பு வியாழக்​கிழமை நடை​பெறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் உள்ள ஈரானிய கண்ணிவெடிகளை அகற்​று​வது உள்​ளிட்ட ராணுவப் பங்களிப்பை எவ்​வாறு வழங்​கலாம் என்​பது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வரு​வ​தாக யுஏஇ அதி​காரி​கள் தெரிவித்​துள்​ளனர். போர் தீவிரமடைந்​துள்ள நிலை​யில், ஈரானியர்​கள் தங்​கள் நாட்​டுக்​குள் நுழையவோ அல்​லது கடந்து செல்​லவோ அமீரகம் தடை விதித்​துள்​ளது.

இருப்​பினும், ‘கோல்​டன் விசா' (10 ஆண்டு வசிப்​பிட அனுமதி) வைத்​திருப்​பவர்​கள் நுழைய அனு​மதிக்கப்படுவார்​கள். மேலும், துபா​யில் நீண்​ட​கால​மாகச் செயல்​பட்டு வந்த ஈரானிய மருத்​து​வ​மனை மற்​றும் ஈரானிய கிளப் ஆகிய​வை​யும் மூடப்​பட்​டுள்​ளன. ஈரானில் உள்ள ஆட்சி வீழ்த்​தப்​படும் வரை போர் தொடர வேண்​டும் என சவுதி அரேபியா உள்​ளிட்ட இதர வளை​குடா நாடுகளும் விரும்​புவ​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

இதனிடையே, ஈரானை எதிர்​கொள்ள பிராந்​தி​யத்​தில் உள்ள முக்​கிய​மான நாடு​களு​டன் இஸ்​ரேல் புதிய கூட்டணி​களை உரு​வாக்கி வரு​வ​தாக அந்​நாட்டு பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு தெரி​வித்​துள்​ளார். குறிப்​பாக, சில அரபு நாடு​கள் தங்​களோடு இணைந்து போரிடு​வது குறித்துப் பேசி வரு​வ​தாக அவர் அமைச்​சர​வைக் கூட்டத்தில் குறிப்​பிட்​டுள்​ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் அமெரிக்க போரில் இணைய தயாராகும் ஐக்கிய அரபு அமீரகம்
சீர்காழியிலும் உதயசூரியனில் மதிமுக போட்டி: வைகோ முடிவுக்கு ஸ்டாலின் வரவேற்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in