

சட்டோகிராம்: சீனாவில் தயாரான கவச வாகனம் (ராணுவ டேங்க்) வெடித்து 2 வங்கதேச ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
வங்கதேசத்தின் சட்டோகிராம் நகரிலுள்ள ஹதஸாரி படைதள மைதானத்தில் ராணுவ வீரர்கள் நேற்று வழக்கமான போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இதில் சீன நாட்டில் தயாரான டைப்-59 வகை கவச வாகனங்கள் ஈடுபட்டிருந்தன. அதில் ஒரு கவச வாகனம் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் அருகிலிருந்த ஒரு ராணுவ அதிகாரியும் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக டாக்காவில் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.