“வரி விதிக்கும் அதிகாரத்தை எனக்கு வழங்கும் வகையில் மசோதாவை திருத்த வேண்டும்” - ட்ரம்ப்

மசோதாவால் இந்தியாவுக்கு பாதிப்பா?
 டொனால்ட் ட்ரம்ப்

டொனால்ட் ட்ரம்ப்

Updated on
1 min read

வாஷிங்டன்: ரஷ்ய எண்​ணெயை வாங்​கும் இந்​தி​யா, சீனா மீது 100% கூடு​தல் வரி விதிக்கக் கோரும் புதிய மசோதா அமெரிக்க செனட் சபை​யில் நிறைவேறியுள்ளது. இந்நிலையில், ஈரான் மீதும் வரி விதிப்பதற்கான விரிவான அதிகாரங்களை தனக்கு வழங்கும் வகையில் இந்த மசோதாவில் திருத்தம் செய்யுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

உக்​ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முயற்சி மேற்​கொண்டு வரு​கிறார். போர் நடத்த ரஷ்யா​வுக்கு நிதி ஆதா​ர​மாக இருப்​பது அதன் கச்சா எண்​ணெய், இயற்கை எரி​வாயு ஆகிய வளங்​கள் ஆகும்.

எனவே, ரஷ்​யா​விடம் இருந்து பிற நாடு​கள் கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை தடுத்​து​விட்​டால், ரஷ்​யா​வுக்கு போர் நடத்​தத் தேவையான நிதி கிடைக்​காது என்று அதிபர் ட்ரம்ப் நினைத்​தார். இதையடுத்து ரஷ்யா மீது பொருளா​தார தடைகளை விதித்ததுடன், ரஷ்​யா​விடம் அதிக அளவில் கச்சா எண்​ணெயை இறக்குமதி செய்​யும் நாடு​களுக்கு அதி​க​மான வரியை விதித்து வருகிறார். சீனாவுக்கு அடுத்து ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடாக இந்தியா உள்ளது.

அந்த வகை​யில், ரஷ்ய எண்​ணெயை வாங்​கும் இந்​தி​யா, சீனா, ஸ்லோவேகியா, ஹங்கேரி, அசர்பைஜான் ஆகிய நாடுகள் மீது 100% கூடு​தல் வரி விதிக்க கோரும் புதிய மசோதா, அமெரிக்க செனட் சபை வாக்​கெடுப்​பில் நேற்று முன்​தினம் நிறைவேறியது.

இந்த சூழலில், ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர், ஈரான் மீது வரி விதிப்பதற்கான விரிவான அதிகாரத்தை தனக்கு வழங்கும் வகையில் இந்த மசோதாவை மாற்றியமைக்க வேண்டும் என்று கூறினார்.

இதுகுறித்து பேசிய அவர், "உண்மையைச் சொல்லப்போனால், இது அவசியமாக இருக்காது. ஆனால் தேவைப்பட்டால், வெறும் பொருளாதாரத் தடைகளாக மட்டுமல்லாமல், ஈரான் மீதும் வரி விதிக்கும் அதிகாரத்தை எனக்கு வழங்கும் அம்சத்தை அவர்கள் சேர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது முக்கியமானது என்று நான் கருதுகிறேன்" என்று அவர் கூறினார்.

<div class="paragraphs"><p> டொனால்ட் ட்ரம்ப்</p></div>
இந்திய, சீனப் பொருட்கள் மீது 100% வரி: மசோதாவுக்கு அமெரிக்க செனட் அவை ஒப்புதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in