நிலவின் மேற்பரப்பில் மோதிய ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ராக்கெட் - பாதிப்பு என்ன?

நிலவின் மேற்பரப்பில் மோதிய ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ராக்கெட் - பாதிப்பு என்ன?
Updated on
1 min read

புளோரிடா: நிலவின் மேற்பரப்பில் சுமார் 4 டன் எடை கொண்ட ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ராக்கெட் பாகம் மோதியதாக தகவல் வெளியாகி உள்ளது.

விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி பணிகளில் பல்வேறு நாடுகள் மும்முராக ஈடுபட்டு வருகின்றன. சமீப காலமாக இந்த துறையில் சர்வதேச தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அதற்கு விண்வெளி சுற்றுலா முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இருப்பினும் அதையும் தாண்டி அமெரிக்காவின் நாசா, இந்தியாவின் இஸ்ரோ போன்ற விண்வெளி ஆய்வு மையங்களுக்கு எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் விண்வெளி ஆய்வு பணிகளில் உதவி வருகிறது.

‘மானுடர்களுக்கு நிலவில் பேஸ் (மூன் பேஸ்) இருக்க வேண்டும், செவ்வாய் கிரகத்தில் நகரங்கள் இருக்க வேண்டும், மனித வாழ்க்கை நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருக்க வேண்டும்’ என விண்வெளி சார்ந்த எலான் மஸ்க் கொண்டுள்ள கனவு மிகப்பெரியது. அதற்கு சான்றாக பல்வேறு பணிகளை விண்வெளியில் வெற்றிகரமாக ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்தியதும் உண்டு.

இத்தகைய சூழலில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபால்கன் 9’ ராக்கெட்டின் மேல் பகுதி இந்திய நேரப்படி புதன்கிழமை அன்று நிலவின் மேற்பரப்பில் மோதியது. அதை எடை 4 டன். இதனால் அந்த இடத்தில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டிருக்க கூடும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதன் பாதிப்புகள் எத்தகையும் என்பது குறித்து அறிய முறையான ஆய்வுகள் மற்றும் துல்லியமான படங்கள் அவசியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த ராக்கெட்டின் பாகங்களை கண்டறிய நிலவில் அமெரிக்காவின் நாசா பணியை தொடங்கி உள்ளதாக தகவல். நிலவினை சுற்றி வரும் தென் கொரியாவின் விண்கலனும் இந்த பணியில் இறங்கியுள்ளது. இருப்பினும் இது குறித்த தகவல் கிடைக்க சில நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு ஆபத்தா?

விண்வெளி சார்ந்த ஆய்வு பணிகள் அதிகளவில் நடைபெற்று வருகின்ற காரணத்தால் விண்வெளி குப்பை (Space Debris) குறித்த கவலை விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

இந்நிலையில், ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் பாகம் நிலவினை மோதி உள்ளது. இதனால் பூமிக்கு ஆபத்து ஏதும் இல்லை என நாசா செய்தித் தொடர்பாளர் ஜிமி ரஸல் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவில் மோதிய ஃபால்கன் 9 ராக்கெட் கடந்த 2025-ல் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் பூஸ்டர் பூமிக்கு திரும்பிய நிலையில், அதன் மேல் பகுதி மட்டும் விண்ணில் இருந்துள்ளது.

நிலவின் மேற்பரப்பில் மோதிய ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ராக்கெட் - பாதிப்பு என்ன?
பாலஸ்தீனத்தில் 112 பேரின் உடல்களுக்கு கூட்டு இறுதிச் சடங்கு: 2023-ல் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தவர்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in