ஏப்ரலில் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த இந்திய மாலுமி உட்பட 5 ஊழியர்கள் சுட்டுக் கொலை: சோமாலிய கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

ஏப்ரலில் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த இந்திய மாலுமி உட்பட 5 ஊழியர்கள் சுட்டுக் கொலை: சோமாலிய கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
Updated on: 
1 min read

மொகடிஷு: சோமாலியக் கடற்​பகு​தி​யில் கடத்​தப்​பட்ட கப்​பலில் இருந்த இந்திய மாலுமி ஒரு​வர் உட்பட 5 கப்​பல் ஊழியர்​களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் சுட்​டுக் கொன்​றுள்​ளனர்.

ஆப்​பிரிக்க நாடான சோமாலி​யா​வின் தன்​னாட்சி பெற்ற மண்டலமான `புண்ட்​லாண்ட்' பகு​தி​யின் கடல்​சார் காவல் படை வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ள​தாவது: கடந்த ஏப்ரல் மாதம் சோமாலி​யத் தலைநகர் மொக​திசுவை நோக்​கிச் சென்று கொண்​டிருந்த `எம்டி ஹானர் 25' என்ற எண்​ணெய் சுத்திகரிப்​புக் கப்​பலை கடற்​கொள்​ளை​யர்​கள் கடத்​தினர். இக்கப்பலில் 18,500 பீப்​பாய் எரிபொருள் மற்​றும் 17 ஊழியர்​கள் இருந்​தனர்.

இந்​நிலை​யில், `தரின்​-​பார்' பகு​தி​யில் ரோந்​துப் படை​யினர் நடத்திய மீட்பு நடவடிக்​கை​யின்​போது, கப்​பலை கடத்​திய சோமாலிய கொள்​ளை​யர்​கள் சரணடைய முன்​வந்​தனர்.

இருப்பினும், அவர்​கள் கப்​பலில் இருந்த 5 ஊழியர்​களை ஏற்கெனவே சுட்​டுக் கொன்​று​விட்​டனர். இதில் ஒரு இந்​தி​யர், 3 பாகிஸ்​தானியர்​கள் மற்​றும் மியான்​மரைச் சேர்ந்த ஒரு​வர் அடங்கு​வர். எஞ்​சிய 12 பேரில் 10 பேர் பாகிஸ்​தானைச் சேர்ந்தவர்கள்.

`எம்டி ஹானர் 25' கப்​பல், பாது​காப்​புப் படை​யினரின் முழு கட்டுப்பாட்​டுக்​குள் தற்​போது கொண்​டு​வரப்​பட்​டுள்​ளது. இச்சம்பவம் தொடர்​பாக 16 கொள்​ளை​யர்​கள் கைது செய்யப்பட்டுள்​ளனர். தப்பி ஓடிய எஞ்​சிய கொள்​ளை​யர்​களைத் தேடும் பணி நடை​பெற்று வரு​கிறது. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்​ளது.

மற்​றொரு கப்​பல் மீட்பு

டோகோ நாட்டு கொடி​யுடன் செங்​கடலில் பயணித்த 'எம்டி யூரேகா' என்ற மற்​றொரு எரிபொருள் கப்​பலை​யும், அதிலிருந்த 12 ஊழியர்​களை​யும் (8 எகிப்​தி​யர்​கள், 4 இந்​தி​யர்​கள்) சோமாலியக் கொள்​ளை​யர்​கள் கடந்த செவ்​வாய்க்​கிழமை விடு​வித்​தனர். மீட்கப்​பட்ட 12 பேரும் தற்​போது உள்​ளூர் மக்​களின் பராமரிப்​பில் பாது​காப்​பாக உள்​ள​னர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in