வங்கதேசத்துக்கு டிசம்பரில் திரும்புவேன்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா

ஷேக் ஹசீனா

ஷேக் ஹசீனா

Updated on
1 min read

புதுடெல்லி: வங்​கதேசத்​தில் 2024-ம் ஆண்டு மாணவர்கள் போராட்டத்தால், பிரதமர் பதவியை இழந்த ஷேக் ஹசீனா இந்​தி​யா​வில் தஞ்​சம் அடைந்​தார். தற்​போது அங்கு தேர்​தல் நடை​பெற்று பிஎன்பி கட்சி ஆட்​சிக்கு வந்​துள்​ளது. பிரதம​ராக தாரிக் ரகு​மான் உள்​ளார். மாணவர்​கள் போராட்​டம் அடக்​கு​முறை தொடர்​பான வழக்​கில், வங்​கதேசத்​தின் சர்​வ​தேச குற்​ற​வியல் தீர்ப்​பா​யம் முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வுக்கு மரண தண்​டனை விதித்​தது. இதில் கூறப்​பட்ட குற்​றச்​சாட்​டு​களை ஷேக் ஹசீனா மறுத்​தார்.

இந்​நிலை​யில் தனி​யார் செய்தி நிறு​வனம் ஒன்​றுக்கு ஷேக் ஹசீனா அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: என்னை வங்​கதேசத்​துக்கு திருப்பி அனுப்​பும்​படி, வங்​கதேச அதி​காரி​கள் இந்​தி​யா​வுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வரு​கின்​றனர். நான் நானாகவே வங்​க தேசம் செல்​வேன். எனது கட்சி தலை​வர்​களும், தொண்​டர்​களும், மிகுந்த அழுத்​தத்​துக்கு ஆளாகி​யுள்​ளனர். நானும், அவாமி லீக் கட்​சி​யின் மூத்த தலை​வர்​களும் டிசம்​பர் மாதத்​தில் வங்​கதேசம் திரும்பி நீதி​மன்​றத்​தில் சரணடைய திட்​ட​மிட்​டுள்​ளோம்.

எனக்கு நீதி​யின் மீது நம்​பிக்கை உள்​ளது. என் மீதான வழக்​கு​கள் அரசி​யல் உள்​நோக்​கம் கொண்​டவை என்​பது வழக்கு விசா​ரணை​யில் மக்​களுக்கு தெரிய​வரும். நாங்​கள் சரணடை​யும் போது கைது செய்​யப்​படலாம். சிறை தண்​டனையை பற்றி நான் கவலைப்​பட​வில்​லை. அதை நான் எனது அரசி​யல் வாழ்க்​கை​யில் பலமுறை அனுப​வித்​துள்​ளேன். இந்த விஷ​யத்​தில் எது நல்​லது, எது தவறு என முடிவு செய்​யும் உரிமை வங்​கதேச மக்​களுக்கு உள்​ளது. இவ்வாறு ஷேக் ஹசீனா கூறினார்.

<div class="paragraphs"><p>ஷேக் ஹசீனா</p></div>
கடலில் ‘வலை' மூலம் ராக்கெட்டை பத்திரமாக மீட்டு அசத்தல்: விண்வெளித்துறையில் சீனா புதிய சாதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in