கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பு முக்கியம்: ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பு முக்கியம்: ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
Updated on
2 min read

பாரிஸ்: இந்​தி​யக் கடல்​சார் பணி​யாளர்​களின் பாது​காப்பு தொடர்​பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்​பிடம் பிரதமர் நரேந்​திர மோடி வலி​யுறுத்​தி​னார்.

ஜி7 அமைப்​பில் அமெரிக்​கா, பிரிட்​டன், பிரான்​ஸ், ஜெர்​மனி, இத்தாலி, கனடா, ஜப்​பான் ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்ளன. இந்த ஆண்​டுக்​கான ஜி7 உச்சி மாநாடு பிரான்​ஸின் ஏவியான் நகரில் கடந்த 15-ம் தேதி தொடங்​கியது.

இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரிட்​டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்​மர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்​ரான், ஜெர்மனி பிரதமர் பிரெட்​ரிக் மெர்​ஸ், இத்​தாலி பிரதமர் ஜார்​ஜியா மெலோனி, கனடா பிரதமர் மார்க் கார்​னி, ஜப்​பான் பிரதமர் சனேடகைச்​சி, ஐரோப்​பிய ஆணை​யத்​தின் தலை​வர் உர்​சுலா வொன் டெர் லியன், ஐரோப்​பியக் கவுன்​சில் தலை​வர் அந்தோணியோ கோஸ்டா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றுள்​ளனர்.

இதனிடையே, பிரதமர் மோடி கடந்த 13-ம் தேதி டெல்​லி​யில் இருந்து பிரான்ஸ் சென்​றநிலை​யில் அங்​கிருந்து ஸ்லோவேக்கியாவுக்கு பயணம் மேற்​கொண்​டார். அந்​நாட்​டுத் தலை​வர்​களைச் சந்​தித்​துப் பேச்​சு​வார்த்தை நடத்​திய பின்​னர் அவர் ஜி7 மாநாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக பிரதமர் மோடி நேற்று முன்​தினம் மீண்​டும் பிரான்​ஸுக்கு திரும்​பி​னார்.

பிரான்​ஸின் ஏவி​யான் நகரில் நேற்று முன்​தினம் மாலை நடை​பெற்ற ஜி7 அமர்​வு​களில் பிரதமர் மோடி சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்​றார். ஜி7 மாநாட்​டின் போது அமெரிக்க அதிபர் ட்ரம்​பை, பிரதமர் மோடி நேற்று சந்​தித்​துப் பேசி​னார். இரு தலை​வர்​களும் கைகுலுக்கி கொண்​டனர். இரு​வரும் அரு​கருகே அமர்ந்து 5 நிமிடங்​கள் பேசினர். கடந்த 2025-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் அமெரிக்கா​வுக்கு சென்ற மோடி, அதிபர் ட்ரம்பை சந்​தித்​துப் பேசினார்.

அதன் பிறகு அமெரிக்க அரசின் கூடு​தல் வரி விதிப்​பால் இரு நாடுகள் இடையி​லான உறவில் லேசான விரிசல் ஏற்​பட்​டது. இந்தச் சூழலில் சுமார் 16 மாதங்​களுக்​குப் பிறகு அதிபர் ட்ரம்பை அவர் நேற்​று​முன்​தினம் மீண்​டும் சந்​தித்​துப் பேசி​யது முக்கியத்துவம் பெற்​றது.

மாநாடு இறுதி நாள்

இந்​நிலை​யில் மாநாட்​டின் இறுதி நாளான நேற்​று, பிரிட்​டிஷ், கனடா, இத்​தாலி பிரதமர்​கள், ஐக்​கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் ஜயாத் அல் நயான் உள்​ளிட்​டோரை பிரதமர் மோடி தனித்​தனி​யாகச் சந்​தித்​துப் பேசி​னார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்​புட​னும் பிரதமர் மோடி தனி​யாகப் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். காலை​யில் தொடங்​கிய மாநாட்டு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்ற பின்​னர் மதிய உணவு இடைவேளை​யின்​போது அதிபர் ட்ரம்ப்பை பிரதமர் மோடி சந்​தித்​தார்.

அப்​போது உலக அளவில் உள்ள கடல் சார் பணி​யாளர்​களில் 10 சதவீதம் பேர் இந்​தி​யர்​கள் என்​றும், இந்​தி​யக் கடல்​சார் பணி​யாளர்​கள் பாது​காப்​பாக பணி​யாற்ற அமெரிக்கா உதவவேண்​டும் என்று பிரதமர் மோடி அப்​போது வலி​யுறுத்தி​னார். கடல்​சார் பணி​யாளர் உயிருக்​குத் தேவை​யான பாது​காப்பை வழங்​கு​வது தொடர்​பாக​வும், அவர்​கள் அச்​சுறுத்​தல் இல்​லாமல் பணி​யாற்​று​வதன் அவசி​யத்​தை​யும் பிரதமர் மோடி அதிபர் ட்ரம்​பிடம் எடுத்​துரைத்​தார்.

அமெரிக்​கா-ஈ​ரான் இடையே போர் நடை​பெற்று வந்த நிலை​யில், அண்​மை​யில் ஓமன் கடல் பகு​தி​யில் அமெரிக்க ராணுவம் நடத்​திய தாக்​குதலில் 3 இந்​திய மாலுமிகள் உயி​ரிழந்த சம்​பவம் கடந்த வாரம் இரு​நாட்டு உறவில் புதிய சிக்​கலை ஏற்​படுத்​தி​யது. இதைத் தொடர்ந்தே இந்த விவ​காரத்தை பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப்​பிடம் எடுத்​துரைத்​தார் என்று தெரிய​வந்​துள்​ளது.

இந்த சந்​திப்​பின்​போது இரு நாடு​களுக்கு இடையி​லான நல்​லுறவு, பொருளா​தார வளர்ச்​சி, விநி​யோகச் சங்​கி​லிகள், செயற்கை நுண்​ணறிவு (ஏஐ), முதலீட்​டுப் பங்​களிப்​பு​கள், வர்த்​தகம், பாது​காப்பு ஒத்​துழைப்​பு, எரிசக்​திப் பாது​காப்​பு, முக்​கிய கனிமங்​கள், விசா தொடர்​பான விவ​காரங்​கள், மேற்கு ஆசி​யா​வில் ஏற்​பட்​டுள்ள மாற்​றங்​கள் உள்​ளிட்​ட​வை குறித்​து வி​வா​திக்​கப்​பட்​ட​தாகத்​ தெரிய​வந்​துள்​ளது.

பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் புகழாரம்

பிரதமர் மோடி குறித்து அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “இந்தியப் பிரதமர் மோடி மிகவும் அமைதியானவர், நிதானமானவர். எதையும் சாதிக்கக்கூடிய திறமை படைத்தவர். நான் அப்படி இல்லை. அவர் எப்படி இருக்கிறார் பாருங்கள்’’ என்று பாராட்டினார்.

வர்த்தகம் மற்றும் வரிவிதிப்பு விவகாரங்கள் குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலிலும், பிரதமர் மோடிக்கு, அதிபர் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களின் அதிகாரப்பூர்வ சந்திப்பு முக்கித்துவம் பெற்றுள்ளது.

கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பு முக்கியம்: ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
ஈரான் போரில் ட்ரம்ப் தோல்வியா? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in