‘ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி விஷம் வைத்து கொல்லப்பட்டார்’ - 5 ஐரோப்பிய நாடுகள் உறுதி

‘ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி விஷம் வைத்து கொல்லப்பட்டார்’ - 5 ஐரோப்பிய நாடுகள் உறுதி
Updated on
1 min read

லண்டன்: ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்பதை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட ஐந்து ஐரோப்பிய நாடுகள் உறுதி செய்துள்ளன.

இந்த நாடுகளை சேர்ந்த வெளியுறவத்துறை அமைச்சர்கள் இதனை பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த அவரது உடலில் எபபாட்டடின் (Epibatidine) என்ற விஷம் இருந்ததை இந்த நாடுகள் உறுதி செய்தன. இது தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு தவளை இனத்துக்கு உள்ள விஷம் எனவும் இந்த நாடுகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சர்வதேச சட்ட விதிகளை புறக்கணித்து இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தி உள்ளதாக இந்த ஐந்து ஐரோப்பிய நாடுகளும் கூறியுள்ளன. இதோடு ரசாயன ஆயுத பயன்பாடு தொடர்பான விவகாரத்தில் ரஷ்யா மீது இந்த நாடுகள் புகார் அளித்துள்ளதாகவும் தகவல்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே பிப்ரவரி மாதத்தில் நவால்னி, ரஷ்யாவின் கார்ப் நகரத்தில் உள்ள ஆர்க்டிக் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு புதின்தான் காரணம் என நவால்னியின் மனைவி யூலியா நவல்னயா குற்றச்சாட்டு வைத்தார். ‘புதின் என் கணவருக்கு விஷம் வைத்து கொன்றார்’ என யூலியா தெரிவித்தார்.

‘ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி விஷம் வைத்து கொல்லப்பட்டார்’ - 5 ஐரோப்பிய நாடுகள் உறுதி
T20 WC 2026: பாக். அணிக்கு எதிராக ஆதிக்கத்தை தொடருமா இந்திய அணி?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in