

முனிச்: ஜெர்மனியில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று பார்வையிட்டார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ஜெர்மனியின் முனிச் நகரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தொழிற்சாலையை அவர் பார்வையிட்டார். அந்நிறுவனத்தின் எம்.சீரிஸ் வாகனங்கள், மின்சார மோட்டார் சைக்கிள்கள், பிஎம்டபிள்யூ - ஐஎக்ஸ்3, ரோல்ஸ் ராய்ஸ் உட்பட பல்வேறு புதிய மாடல் வாகனங்களைப் பார்வையிட்டார்.
மேலும், தமிழகத்தின் ஒசூரில் டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து பிஎம்டபிள்யூ நிறுவனம், பிஎம்டபிள்யூ - ஜி450ஜிஎஸ் என்ற புதிய மோட்டார் சைக்கிளை தயாரித்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் இந்தியாவில் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை. இதில் ராகுல் காந்தி அமர்ந்து அதன் சிறப்பம்சங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் பிஎம்டபிள்யூ காரில் அமர்ந்தும், அதன் சிறப்பம்சங்கள் குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்தார்.