அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி குழுவில் ரகுராம் ராஜன் உட்பட 3 இந்தியர்கள் நியமனம்

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி குழுவில் ரகுராம் ராஜன் உட்பட 3 இந்தியர்கள் நியமனம்
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் மத்​திய வங்​கி​யான ‘ஃபெடரல் ரிசர்வ்' அமைப்​பின் குழுவில் இந்​திய ரிசர்வ் வங்​கி​யின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்​ளிட்ட 3 இந்​திய வம்​சாவளி நிபுணர்கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

அமெரிக்​கா​வில் கடந்த சில ஆண்​டு​களாக நீடித்து வரும் கடுமை​யான பணவீக்​கத்​தைக் கட்​டுப்​படுத்​த​வும், அந்​நாட்​டின் பணவியல் கொள்​கைகளை முழு​மை​யாக சீரமைக்​க​வும் புதிய சீர்​திருத்​தத் திட்​டம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது.

இதற்​காக, ஃபெடரல் ரிசர்வ் வங்​கி​யின் புதிய தலை​வ​ரான கெவின் வார்ஷ் 5 புதிய உயர்​நிலை பணிக்​குழுக்​களை அறி​வித்​துள்​ளார். இக்​குழுக்​களில்​தான் ரகு​ராம் ராஜன், டெல்​லி​யில் பிறந்த அமெரிக்​கப் பொருளா​தார அறிஞர் ராஜ் செட்டி மற்​றும் மைக்​ரோ​சாஃப்ட் நிறு​வனத்​தின் மூத்த நிர்​வாகி ஆஷா சர்மா ஆகிய 3 இந்​தி​யர்​கள் நியமிக்கப்பட்டுள்​ளனர்.

கரோனா பெருந்​தொற்று காலத்​திற்​குப் பிறகு, அமெரிக்க மத்​திய வங்​கி​யின் நிதி​நிலை அறிக்கை சுமார் 9 டிரில்​லியன் டால​ராக உயர்ந்​தது. இதனை முறைப்​படுத்​தி, பணவீக்​கத்தை நீண்ட கால இலக்​கிற்​குள் கொண்​டுவர ஃபெடரல் ரிசர்வ் வங்கி முயன்று வரு​கிறது. இந்​நிலை​யில், வங்​கி​யின் செயல்​பாடு​களை வெளிப்​படைத்​தன்​மை​யுடன் மாற்​றி, புதிய சிந்​தனை​களைப் புகுத்​தும் நோக்​கில் உலகின் மிகச்​சிறந்த 15 நிபுணர்​களைக் கொண்டு இந்த ஐந்து முக்​கியக் குழுக்​களை ஃபெடரல் ரிசர்வ் தலை​வர் அமைத்​துள்​ளார்.

இங்​கிலாந்து வங்​கி​யின் முன்​னாள் ஆளுநர் மெர்​வின் கிங், நோபல் பரிசு பெற்ற தாமஸ் சார்​ஜென்ட் மற்​றும் வால்​மார்ட் முன்​னாள் சிஇஓ டக் மெக்​மில்​லன் போன்ற உலகளா​விய ஆளு​மை​களு​டன் இணைந்து மூன்று இந்​தி​யர்​களும் இந்த சீர்​திருத்​தக் குழுவில் இடம்​பெற்​றுள்​ளது சர்​வ​தேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

இக் குழுவின் பரிந்​துரைகள் மூலம், அமெரிக்கா தனது பல ஆண்டு​கால கடுமை​யான பணவீக்க சவால்​களைக் கடந்​து, சிறப்பான கொள்கை முடிவு​களை எடுக்​கும் என்று கெவின்​ வார்ஷ் தெரிவித்​துள்​ளார்​.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி குழுவில் ரகுராம் ராஜன் உட்பட 3 இந்தியர்கள் நியமனம்
ஊழல் புகாரில் சிக்கினால் உடனடியாக பதவி பறிப்பு: அமைச்சர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in