பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி: அதிபர் மார்கோஸ் அளித்த விருந்தில் பங்கேற்பு

ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டுக்காக பயணம்
பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி: அதிபர் மார்கோஸ் அளித்த விருந்தில் பங்கேற்பு
Updated on: 
1 min read

மணிலா: ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிலிப்பைன்ஸுக்கு புறப்பட்டு சென்றார். தலைநகர் மணிலாவை சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிலிப்பைன்ஸ் தலைமையில் 11 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஆசியான் கூட்டமைப்பின் 49-வது உச்சி மாநாடு மற்றும் அது தொடர்பான மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்க பிலிப்பைன்ஸ் அதிபரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி நேற்று மணிலா சென்றடைந்தார். விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் மற்றும் அதிகாரிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, மாலையில் அதிபர் மார்கோஸ் அளித்த சிறப்பு இரவு விருந்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஆசியான் தலைவர்களுடன் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இன்று நடைபெறும் 23-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில், 2026-2030 செயல் திட்டம் மற்றும் இருதரப்பு விரிவான வியூகக் கூட்டாண்மை குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்கிறார். குறிப்பாக, ஆசியான்-இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தத்தின் மறுஆய்வுப் பணிகளை விரைந்து முடித்து, சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்த இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது.

தென் சீனக் கடல் பகுதியில் சீனாவுடன் பதற்றம் நிலவும் சூழலில், கடல்சார் பாதுகாப்பு, நீலப் பொருளாதாரம் மற்றும் ரோந்துக் கப்பல்கள், ரேடார்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த மாநாட்டின்போது விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

2024 செப்டம்பருக்குப் பிறகு முதன்முறையாக நடைபெறும் ‘குவாட்’ தலைவர்கள் உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் (இன்று மணிலா வருகிறார்), ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி,் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோரைச் சந்தித்து ஆலோ சனை நடத்த உள்ளார்.

பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி: அதிபர் மார்கோஸ் அளித்த விருந்தில் பங்கேற்பு
புத்தக கொள்முதல் முறைகேடு: அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் கைது

X