17 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக போராட்டம் நடத்த தொண்டர்களுக்கு இம்ரான் கான் வலியுறுத்தல்

17 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக போராட்டம் நடத்த தொண்டர்களுக்கு இம்ரான் கான் வலியுறுத்தல்
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் இம்​ரான் கான், கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பிரதம​ராக பதவி வகித்​தார். அவருக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்​மான் ரூ.8.5 கோடி மதிப்​பிலான கைக்​கடி​காரத்தை பரிசளித்​தார். அதை அரசின் கரு​வூலத்​தில் சேர்க்​காமல், அதை விற்​ப​தற்கு இம்​ரான் கான் மனைவி புஷ்ரா பீபி முயன்​றார்.

இது தொடர்பான வழக்கில் இம்​ரான் கான், புஷ்ராவுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்​நிலை​யில் இம்​ரான்​கானின் எக்ஸ் தள பக்​கத்​தில் நேற்று முன்​தினம் இரவு ஒரு தகவல் வெளி​யிடப்​பட்​டது.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 3 ஆண்​டு​களாக அடிப்​படை ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்​டு​களால் எனக்கு தண்​டனை​கள் வழங்​கப்​பட்​டன. அது​போல், பரிசு பொருள் வழக்​கில் எனக்கு கிடைத்த தண்​டனை எனக்கு புதிதல்ல. எனது தரப்பு வாதங்​கள் இந்த வழக்​கில் கேட்​கப்​பட​வில்​லை. நானும், எனது மனை​வி​யும் தனிமை சிறை​யில் அடைக்​கப்​பட்டு கொடுமை​களை அனுப​வித்து வரு​கிறோம். சட்​டம் மற்​றும் அரசி​யலமைப்பை நிலை​நாட்ட நமது வழக்​கறிஞர்​கள் அணி போராட வேண்​டும்.

நீதிக்​காக போராட தெரு இயக்​கத்தை உரு​வாக்க வேண்​டும். தேசிய அளவில் போராட்​டம் நடத்​தப்பட வேண்​டும். பாகிஸ்​தானின் உண்​மை​யான சுதந்​திரத்​துக்​காக நான் எனது வாழ்க்​கையை தியாகம் செய்​ய​வும் தயா​ராக உள்​ளேன். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இம்ரான் கானுக்கு சிறை நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், அவர் சார்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளளது.

17 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக போராட்டம் நடத்த தொண்டர்களுக்கு இம்ரான் கான் வலியுறுத்தல்
உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்களாக அறிவிப்பதா? - மார்க்சிஸ்ட், விசிக கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in