நூற்றாண்டு பழமையான வேதியியல் புதிருக்கு தீர்வு கண்ட பிரான்ஸ், ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

நூற்றாண்டு பழமையான வேதியியல் புதிருக்கு தீர்வு கண்ட பிரான்ஸ், ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு
Updated on: 
2 min read

ஸ்டாக்ஹோம்: நூற்​றாண்டு பழமை​யான வேதியியல் புதிருக்கு தீர்வுகண்ட பிரான்ஸ் மற்​றும் ஜப்​பானை சேர்ந்த 2 விஞ்ஞானிகளுக்கு வேதி​யியலுக்​கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படு​கிறது.

மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், பொருளா​தா​ரம் மற்​றும் உலக அமை​திக்​காக பாடு​பட்​டோருக்கு ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது. 2026-ம் ஆண்​டுக்​கான நோபல் பரிசுகளை பெறு​பவர்​களின் பெயர்​கள் அறிவிக்​கப்​பட்டு வருகின்றன. மருத்​து​வம், இயற்​பியல் துறை​களுக்​கான நோபல் பரிசுகள் அறிவிக்​கப்​பட்டு விட்​டன. அதைத் தொடர்ந்து வேதியியலுக்​கான நோபல் பரிசு நேற்று அறிவிக்​கப்​பட்​டது.

நேரியல் அல்​லாத விளைவு​கள், தன்​வினையூக்​கம் ஆகிய​வற்றை கண்​டறிந்​ததற்​காக பிரான்ஸ் நாட்​டைச் சேர்ந்த ஹென்றி பி. காகன், ஜப்​பான் நாட்​டைச் சேர்ந்த கென்சோ சோய் ஆகிய இரு விஞ்​ஞானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்​தளிக்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து வேதி​யியலுக்​கான நோபல் குழு​வின் தலை​வர் ஹெய்​னர் லிங்கே கூறும்​போது, “இந்த ஆண்​டுக்​கான பரிசு அடிப்​படை வேதி​யியலுக்​கானது. அமினோ அமிலங்​கள் போன்ற சில மூலக்​கூறுகள், ஒன்​றுக்​கொன்று கண்​ணாடி பிம்​பங்​களாக இருக்​கும் இரண்டு வகைகளாக உள்​ளன. இருப்​பினும், உயிரி மூலக்​கூறுகள் இந்த கண்​ணாடி பிம்​பங்​களில் ஒன்றை மட்​டுமே கொண்​டுள்​ளன.

இது​போன்ற வேதி​யியல் சமச்​சீரின்மை எவ்​வாறு தோன்​றி​யிருக்​கக்​கூடும் என்​பது வேதி​யிய​லா​ளர்​களுக்கு நீண்ட கால​மாக ஒரு புதி​ராகவே இருந்து வந்​தது. நூற்​றாண்டு பழமை​யான இந்​தப் புதிருக்கு ஒரு தீர்​வைக் கண்​டு​பிடித்​ததற்​காக ஹென்றி பி. காகன் மற்​றும் கென்சோ சோய் ஆகியோ​ருக்கு 2026-ம் ஆண்​டுக்​கான வேதி​யியல் நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது” என்​றார்.

புதிருக்கு தீர்வு கண்​டது எப்​படி?

விஞ்​ஞானிகளின் கண்​டு​பிடிப்பு குறித்து ஹெய்​னர் லிங்கே கூறிய​தாவது: நமது இடது மற்​றும் வலது கைகளைப் போல​வே, சில மூலக்​கூறுகள் ஒன்​றுக்கொன்று கண்​ணாடி பிம்​பங்​களாக இருக்​கும் இரண்டு வடிவங்​களில் காணப்​படு​கின்​றன. அவற்​றில் ஒரே மாதிரி​யான அணுக்​கள் ஒரே வித​மாக இணைந்​திருந்​தா​லும், அவற்​றின் தன்மை வேறு​பட்​ட​வை. இந்த வேறு​பாடு உயி​ரியலில் மிக​வும் முக்​கிய​மான​தாக அமை​கிறது.

புரதங்​களின் கட்​டு​மானக் கூறுகளான அமினோ அமிலங்​கள் இதற்கு ஒரு சிறந்த எடுத்​துக்​காட்​டு. அவை ஒன்​றுக்​கொன்று எதிரெ​தி​ரான இரண்டு வடிவங்​களில் இருக்க முடி​யும். ஆனால் உயி​ரினங்​கள் புரதங்​களை உரு​வாக்க அவற்​றுள் ஒன்றை மட்​டுமே பெரு​மள​வில் பயன்​படுத்​துகின்​றன. இது, உயிர் எப்​படி ஒரு மூலக்​கூறு வடிவத்தை மற்​றொன்றை விடத் தேர்ந்​தெடுத்​தது? என்​கிற அடிப்​படை கேள்​வியை எழுப்​பு​கிறது.

பல ஆண்​டு​களாக, வேதி​யிய​லா​ளர்​கள் இதற்கு விடையளிக்​கப் போராடினர். இரண்டு கண்​ணாடி பிம்ப வடிவங்​களில் இருக்​கக்​கூடிய மூலக்​கூறுகளை அவர்​கள் உரு​வாக்க முயன்​ற​போது, வேதி வினை​கள் பொது​வாக இரண்டு வடிவங்​களை​யும் ஏறக்​குறைய சம அளவில் உரு​வாக்​கின. ஹென்றி பி. காகன், 1986-ல் ஒரு முக்​கிய​மான திருப்​பு​முனையை ஏற்​படுத்​தி​னார்.

வேதிவினை​கள் எப்​போதும் ஒரு முழுமை​யான சமநிலை​யில் நிகழ வேண்​டிய​தில்லை என்​பதை அவருடைய ஆய்வு காட்​டியது. அதன்​பிறகு கென்சோ சோய் 1995-ல், ஒரு மூலக்​கூறின் ஒருபக்​கச் சாய்வை பெருக்​கும் ஆற்​றல் கொண்ட ஒரு வேதி​வினையை அறி​வித்​தார். அந்த வினை​யானது தன்​வினையூக்​கத்தை உள்ளடக்கியிருந்​தது.

2003-ல், சாத்​தி​ய​மான இரண்டு கண்​ணாடி பிம்ப வடிவங்​களில் அடிப்​படை​யில் ஒன்றை மட்​டுமே உரு​வாக்​கும் ஒரு வினையை கென்சோ சோய் செய்து காட்​டி​னார். இது ஒரு மைல்​கல் சாதனையாகும், ஏனெனில் உயி​ரியல் அமைப்​பு​களைத் தவிர, வேறு எந்த விஞ்​ஞானிகளாலும் இதற்கு முன்பு இத்​தகைய உயர் அளவி​லான வேதி​யியல் திசைச்​சார்பை தன்​னிச்​சை​யாக அடைய முடிந்​த​தில்​லை. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

நூற்றாண்டு பழமையான வேதியியல் புதிருக்கு தீர்வு கண்ட பிரான்ஸ், ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு
மத மாற்றத்தில் ஈடுபடும் அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெற அனுமதிக்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in