நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த இந்தியாவுக்கு நேபாள அதிபர் ராம சந்திர பவுடல் நன்றி

நேபாள அதிபர் ராமச்சந்திர பவுடல்

நேபாள அதிபர் ராமச்சந்திர பவுடல்

Updated on
1 min read

காத்மாண்டு: நேபாளத்துக்கு நிவாரண உதவிகள் வழங்கிய இந்தியாவுக்கு அந்நாட்டு அதிபர் ராமச்சந்திர பவுடல் நன்றி தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் பனிப்பாறைகள் உடைந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 600-ஐ தாண்டி உள்ளது. இந்நிலையில், நிவாரணப் பொருட்களை 3 விமானங்களில் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. மேலும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில், 11 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ மற்றும் சுரங்கப்பாதை மீட்புக் குழுவையும் அனுப்பி உள்ளது.

இதையடுத்து, இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நேபாள அதிபர் ராமச்சந்திர பவுடல் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பேரிடரைத் தொடர்ந்து, இந்திய அரசு வழங்கிய தாராளமான ஆதரவு மற்றும் ஒற்றுமை உணர்வுக்கும், உங்கள் அன்பான அக்கறைக்கும், தாராளமாக நிவாரண உதவி வழங்கியதற்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு எங்கள் அரசு மற்றும் மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பேரிடரில் இந்தியர்கள் உயிரிழந்த துயரமான நிகழ்வுக்காக, இந்திய அரசுக்கும் மக்களுக்கும் எங்கள் மனமார்ந்த இரங்கலையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>நேபாள அதிபர் ராமச்சந்திர பவுடல்</p></div>
லார்ட்ஸ் டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து அணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in