அமைச்சர் ஜெய்சங்கரின் 4 மணி நேர பயணத்தால் இந்தியா, வங்கதேச உறவில் புதிய அத்தியாயம்

அமைச்சர் ஜெய்சங்கரின் 4 மணி நேர பயணத்தால் இந்தியா, வங்கதேச உறவில் புதிய அத்தியாயம்
Updated on
1 min read

டாக்கா: மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்​சங்​கரின் 4 மணி நேர பயணத்​தால் இந்​தி​யா, வங்​கதேசம் இடையி​லான உறவில் புதிய அத்​தி​யா​யம் தொடங்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

வங்​கதேச முன்​னாள் பிரதமரும், வங்​கதேச தேசி​ய​வாத கட்​சி​யின் தலை​வரு​மான (பிஎன்​பி) கலீதா ஜியா கடந்த 30ம் தேதி காலமானார். அவரது இறு​திச் சடங்கு டாக்​கா​வில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில் இந்​தி​யா​வின் சார்​பில் வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்​சங்​கர் பங்​கேற்​றார்.

மறைந்த கலீதா ஜியா​வின் மகன் தாரிக் ரஹ்​மானை சந்​தித்த அவர், பிரதமர் நரேந்​திர மோடி​யின் இரங்​கல் கடிதத்தை அளித்தார். வங்​கதேச வெளி​யுறவு அமைச்​சர் தவ்​ஹீத், சட்ட ஆலோ​சகர் ஆசிப், தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் கலீலுர் ரஹ்மான் ஆகியோரை​யும் ஜெய்​சங்​கர் சந்​தித்​துப் பேசி​னார்.

எனினும் வங்​கதேச இடைக்​கால அரசின் தலை​வர் முகமது யூனுஸை அவர் சந்​திக்​க​வில்​லை. கலீதா ஜியா​வின் இறு​திச் சடங்குக்​காக சுமார் 4 மணி நேரம் அமைச்​சர் ஜெய்​சங்​கர் டாக்காவில் முகாமிட்​டிருந்​தார். இந்த பயணத்​தால் இந்​தி​யா, வங்​கதேச உறவில் புதிய அத்​தி​யா​யம் தொடங்​கும் என்று எதிர்பார்க்கப்​படு​கிறது.

வங்​கதேசத்​தில் வரும் பிப்​ர​வரி 12ம் தேதி பொதுத்​தேர்​தல் நடைபெறுகிறது. அந்த நாட்​டின் முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீனா​வின் அவாமி லீக் தேர்​தலில் போட்​டி​யிட தடை விதிக்கப்பட்டு உள்​ளது. எனவே, வங்​கதேச தேசி​ய​வாத கட்சி (பிஎன்​பி), அடிப்​படை​வாத கட்​சி​யான ஜமாத் - இ – இஸ்​லாமி, மாணவர் சங்​கங்​கள் உரு​வாக்​கிய தேசிய மக்​கள் கட்சி (என்​சிபி) ஆகியவை களத்​தில் உள்​ளன. இதில், தாரிக் ரஹ்​மான் பிரதம​ராக பதவி​யேற்​பார் என்று பெரிதும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

டாக்கா மருத்​து​வ​மனை​யில் கலீதா ஜியா சிகிச்சை பெற்​ற​போது பிரதமர் நரேந்​திர மோடி ஓர் அறிக்​கையை வெளி​யிட்​டார். அதில், கலீதா ஜியா​வின் சிகிச்சைக்கு தேவை​யான அனைத்து உதவி​களை​யும் வழங்க இந்​தியா தயா​ராக இருப்​ப​தாக அவர் உறுதி அளித்​தார். இதற்கு பிஎன்பி கட்சி நன்றி தெரி​வித்​தது. இதன்​மூலம் பிஎன்பி கட்​சி​யுடன் சுமுக உறவை பேண இந்​தியா தயா​ராக இருப்பது தெரிகிறது.

இதுதொடர்​பாக இந்​தி​யா​வுக்​கான வங்​கதேச தூதர் ரியாஸ் ஹமீதுல்லா சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “கலீதா ஜியா​வின் இறு​திச் சடங்​கில் பங்​கேற்ற இந்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்​சங்​கர் 4 மணி நேரம் டாக்​கா​வில் முகாமிட்டு இருந்​தார். இதன்​மூலம் வங்​கதேசம், இந்​தியா இடையி​லான உறவில் புதிய அத்​தி​யா​யம் தொடங்​கும்” என்றார்.

அமைச்சர் ஜெய்சங்கரின் 4 மணி நேர பயணத்தால் இந்தியா, வங்கதேச உறவில் புதிய அத்தியாயம்
உத்தர பிரதேசத்தில் 2025-ல் 2,739 என்கவுன்ட்டர்கள்: 48 முக்கிய குற்றவாளிகள் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in