“மேற்காசியா முழுவதையும் இஸ்ரேல் கைப்பற்றினால் நன்றாக இருக்கும்” - அமெரிக்க தூதர்

“மேற்காசியா முழுவதையும் இஸ்ரேல் கைப்பற்றினால் நன்றாக இருக்கும்” - அமெரிக்க தூதர்
Updated on
1 min read

மேற்காசியா முழுவதையும் இஸ்ரேல் கைப்பற்றினால் நன்றாக இருக்கும் என்று அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி தெரிவித்துள்ளார்.

டக்கர் கால்சன் (Tucker Carlson) என்பவருக்கு அளித்த நேர்காணலில் மைக் ஹக்கபி இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும், தனது இந்த கருத்து மிகையானது என்றும் அவர் கூறினார்.

‘‘வரலாற்று ரீதியாகவும் பைபிளில் சொல்லப்பட்டுள்ள படியும் மேற்கு ஆசியா மீது இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது. ஈராக்கின் யூப்ரடீஸ் நதிக்கும் எகிப்தின் நைல் நதிக்கும் இடைப்பட்ட நிலத்தை அபரஹாமின் சந்ததியினருக்கு வழங்க பைபிள் வசனத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்’’ என்று மைக் ஹக்கபி தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் லெபனான், சிரியா, ஜோர்டான், சவூதி அரேபியாவின் சில பகுதிகள் அவர் குறிப்பிடும் பகுதிக்குள் வருகின்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த டக்டர் கால்சன், முழு பிராந்தியத்திலும் இஸ்ரேல் விரிவடைவதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மைக் ஹக்கபி, ‘‘அவர்கள் அதைக் கைப்பற்ற விரும்பவில்லை.

அந்த நிலப்பகுதியை எடுத்துக்கொள்வது பற்றி அவர்கள் பேசவும் இல்லை. இருந்தாலும் எனது கருத்து மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. இந்த எல்லா இடத்திலும் அவர்கள் (இஸ்ரேலியர்கள்) தாக்கப்பட்டால், போரில் அவர்கள் வெற்றி பெற்றால், அவர்கள் அந்த நிலங்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அது முற்றாக வேறு ஒரு விவாதம்‘‘ என்று குறிப்பிட்டார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட இஸ்ரேலிய அரசியல்வாதிகள் சிலர், இஸ்ரேல் விரிவாக்கம் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். இதற்கு சவாலாக விளங்கும் சர்வேதச குறறவியல் நீதிமன்றத்தை கலைக்க அமெரிக்காவும் முயன்று வருகிறது.

இது குறித்து குறிப்பிட்ட மைக் ஹக்கபி, ‘‘அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் வெளியுறவுத் துறை அமைச்சர் ரூபியோவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அகற்ற அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அவர்களின் இந்த நடவடிக்கைக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். காரணம், அவை சட்டத்தை சமமாகப் பயன்படுத்துவதில் உண்மையாக இல்லை. மாறாக முரட்டுத்தனமான அமைப்புகளாக மாறிவிட்டன'’ என தெரிவித்தார்.

“மேற்காசியா முழுவதையும் இஸ்ரேல் கைப்பற்றினால் நன்றாக இருக்கும்” - அமெரிக்க தூதர்
இந்தியாவுக்கான இறக்குமதி வரி 10% - பிப்.24 முதல் அமல்: வெள்ளை மாளிகை தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in