“ஆட்சியை கவிழ்க்க ஈரான் மக்களே ஒன்றிணையுங்கள்” - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு

நேதன்யாகு

நேதன்யாகு

Updated on
1 min read

டெல் அவிவ்: நாட்டின் தலைமைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து, ஆட்சியை கவிழ்க்கும் வெகுஜன போராட்டங்களில் ஈரான் மக்கள் இறங்க வேண்டுமென இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

ஆபரேஷன் ரைசிங் லயன் மூலம் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் ராணுவத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இதனையடுத்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு வெளியிட்ட வீடியோ செய்தியில், “ இஸ்ரேலின் தொடர்ச்சியான ராணுவ நடவடிக்கைகள் ஈரானின் ஆளும் அரசை பலவீனப்படுத்தி, அதிகார மாற்றத்திற்கான பாதையை அமைக்கும். வரவிருக்கும் நாட்களில், ஈரான் பயங்கரவாத ஆட்சியின் ஆயிரக்கணக்கான இலக்குகளை நாங்கள் தாக்குவோம். ஈரானின் துணிச்சலான மக்கள் கொடுங்கோன்மையின் சங்கிலிகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள இது உதவும்.

ஈரானியர்களுக்கு தற்போதைய தருணம் ஒரு அரிய வரலாற்று வாய்ப்பு. இந்த நேரத்தில் ஈரான் மக்கள் செயலற்றவர்களாக இருக்க வேண்டாம். இது ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு முறை மட்டுமே வரும் ஒரு வாய்ப்பு. ஈரானியர்கள் தெருக்களில் இறங்கி ஆளும் அரசை வீழ்த்த ஒன்றுபட வேண்டும்.

பெர்சியர்கள், குர்துகள், அஜர்பைஜானியர்கள், அஹ்வாசிகள் மற்றும் பலுச்சிகள் உட்பட பல இன சமூகங்களும் ஈரானின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டும். ஈரான் மக்கள் தங்கள் தலைவிதியை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

<div class="paragraphs"><p>நேதன்யாகு</p></div>
ஈரான் மீதான தாக்குதலுக்கு நியூயார்க் மேயர் மம்தானி கண்டனம் - மலாலா அதிர்ச்சி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in