அமெரிக்க தளங்களை தாக்குவதற்கு சீன உளவு செயற்கைக்கோள்களை பயன்படுத்திய ஈரான்

அமெரிக்க தளங்களை தாக்குவதற்கு சீன உளவு செயற்கைக்கோள்களை பயன்படுத்திய ஈரான்
Updated on: 
1 min read

வாஷிங்டன்: அமெரிக்கா​வின் நியூ​யார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்​படும் சிஎன்​என் ஊடகம், அமெரிக்கா, ஈரான் இடையி​லான போர் குறித்த சிறப்பு செய்தியை வெளி​யிட்டு உள்​ளது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த ஜூலை​யில் ஜோர்​டான் நாட்​டில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை ஈரான் ராணுவம் ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் மூலம் தாக்கியது.

இதில் அமெரிக்க ராணுவ தளத்​துக்கு பெரும் சேதம் ஏற்​பட்​டது. 3 வீரர்​கள் உயி​ரிழந்​தனர். சீன உளவு செயற்கைக்கோள்​களின் உதவி​யால் ஈரான் ராணுவம் தாக்​குதல் நடத்​தி​யிருப்​பதை அமெரிக்க ராணுவ வட்​டாரங்​கள் உறுதி செய்​துள்​ளன.

மேலும் ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக செல்​லும் கப்​பல்​களை​யும் சீன செயற்​கைக்​கோள்​களின் உதவி​யுடன் ஈரான் ராணுவம் கண்​காணித்து வரு​கிறது. இதன்​மூலம் எதிரி​களின் கப்​பல்​கள் மீதும் அந்த நாடு மிகத் துல்​லிய​மாக ஏவு​கணை, ட்ரோன் தாக்குதல்களை நடத்​துகிறது.

சீனா​வின் உதவி இல்​லாமல் ஈரான் ராணுவத்​தால் அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது மிகத் துல்லியமாக தாக்​குதல் நடத்​தி​யிருக்க முடி​யாது.

ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்தை முடக்க சீனா விரும்​பியது. இதன்​மூலம் சர்​வ​தேச அளவில் கச்சா எண்​ணெய் விலை உயர்ந்து பொருளா​தார நெருக்​கடியை ஏற்படுத்​த​வும் சீனா வியூ​கம் வகுத்​தது. ஈரான் ட்ரோன்​கள் துல்லிய​மாக தாக்​குதல் நடத்த சீன தரப்​பில் சிறப்பு கருவி​கள் வழங்​கப்​பட்​டன. ரஷ்​யா​வும் ஈரானுக்கு உதவி செய்​துள்​ளது.

இரு நாடு​களின் நேரடி, மறை​முக உதவி​களால் அமெரிக்க ராணுவத்​துக்கு எதி​ராக ஈரா​னால் போரிட முடிந்​தது. ஆனால் அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் சீனாவை நேரடி​யாக கண்​டிக்​க​வில்​லை. இவ்​வாறு சிஎன்​என் ஊடகம் தெரி​வித்​துள்​ளது.

அமெரிக்​கா​வின் வால் ஸ்டிரீட் ஜர்​னல் வெளி​யிட்ட செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஈரான் ராணுவத்​தின் முது​கெலும்​பாக ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் உள்​ளன. இவற்றை தயாரிப்​ப​தற்​கான உதிரி பாகங்​கள் சீனா​வில் இருந்து ஈரானுக்கு அனுப்பி வைக்​கப்​பட்டு உள்​ளன.

கடந்த பிப்​ர​வரி முதல் ஜூன் மாதம் வரையி​லான காலத்​தில் சீனா​வில் இருந்து 1,300 முறை விமானங்​கள், கப்​பல்​கள் மூலம் உதிரி பாகங்​கள் ஈரானுக்கு அனுப்​பப்​பட்டு உள்​ளன. ஜிபிஎஸ் கருவி​கள், விமான இன்​ஜின்​கள், மோட்​டார்​களும் சீனா​வில் இருந்து ஈரானுக்கு கொண்​டு செல்​லப்​பட்​டு உள்​ளன. இவ்​வாறு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தளங்களை தாக்குவதற்கு சீன உளவு செயற்கைக்கோள்களை பயன்படுத்திய ஈரான்
ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம்: உயர் நீதிமன்றம் அறிவுரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in