அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்தது ஈரான்

ஈரான் அதிபர்  மசூத் பெசேஷ்கி​யான்

ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கி​யான்

Updated on
1 min read

டெஹ்ரான்: அமெரிக்கா - இஸ்​ரேலுட​னான போரை நிறுத்த, ஈரான் அதிபர் 3 நிபந்​தனை​களை விதித்​துள்​ளார்.

அணு ஆயுத தடை ஒப்​பந்​தத்​துக்கு மறுத்​த​தால் ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் படைகள் கடந்த மாதம் 28ம் தேதி தாக்​குதல் நடத்​தின. இதில் ஈரான் உச்ச தலை​வ​ராக இருந்த அயத்துல்லா காமேனி உட்பட 1,500-க்​கும் மேற்​பட்​டோர் உயிரிழந்தனர்.

புதிய உச்ச தலை​வ​ராக மொஜ்தபா காமேனி​ தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ளார். 10 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் போரை நிறுத்​து​வது தொடர்​பாக ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியானுடன் ரஷ்யா மற்​றும் பாகிஸ்​தான் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யது.

இதையடுத்து எக்ஸ் தளத்​தில் ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் வெளியிட்ட பதிவில், “மத்​திய கிழக்​கில் அமைதி நிலவ ஈரான் உறு​தி​யுடன் இருக்​கிறது. அமெரிக்கா - இஸ்​ரேலால் தொடங்​கப்​பட்ட போரை நிறுத்​து​வதற்கு ஒரே வழி ஈரானின் சட்டப்​படி​யான உரிமை​களை அங்​கீகரிக்க வேண்​டும்.

போர் மூலம் ஏற்​படுத்​திய சேதத்​துக்கு இழப்​பீடு வழங்க வேண்​டும். எதிர்​காலத்​தில் ஈரான் மீது தாக்​குதல் நடத்​தக் கூடாது என சர்​வ​தேச உத்​தர​வாதம் அளிக்​கப்பட வேண்​டும். இந்த 3 நிபந்​தனை​களை ஏற்​றால், ஈரான் போரை நிறுத்​தும்” என கூறியுள்ளார்.

ஈரான் ராணுவ செய்தி தொடர்​பாளர் அபோல்​பசல் சேகர்ச்சி அளித்த பேட்​டி​யில், ”ஈ​ரான் துறை​முகங்​கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்​தி​னால், பெர்​சி​யன் வளை​கு​டா​வில் உள்ள அனைத்து துறை​முகங்​கள் மற்​றும் பொருளா​தார மையங்​கள் மீது ஈரான் இது​வரை இல்​லாத அளவில் மிகப் பெரிய தாக்​குதல் நடத்தும். அதனால் வளை​குடா பகு​தி​யில் உள்ள அனைத்து நாடுகளும், அமெரிக்க படைகளை தங்​கள் நாட்​டில் இருந்து வெளியேற்ற வேண்​டும்” என்​றார்.

ஆட்சி மாற்றம் ?

ஈரான் ஆட்​சி​யாளர்​களுக்கு எதி​ராக மக்​கள் போராட்​டம் நடத்​தி​ய​தால், ஆயிரக்​ கணக்​கானோரை ஈரான் பாதுகாப்பு படை​யினர் சுட்​டுக் கொன்​றனர். ஈரான் மீதான தாக்குதல் காரண​மாக, அங்கு மக்​கள் மீண்​டும் ஆட்சியாளர்களுக்கு எதி​ராக போராட்​டத்​தில் இறங்​கு​வர் என அமெரிக்கா​வும், இஸ்​ரேலும் எதிர்பார்த்​தது.

ஆனால் அவ்​வாறு நடை​பெற​வில்​லை. ஈரான் அரசின் மிரட்​டல்​களுக்கு பயந்து ஈரான் மக்​கள் போராட்​டத்​தில் ஈடுபடவில்​லை. அதனால் ஈரான் போர் காரண​மாக அங்கு ஆட்சி மாற்றம் உறு​தி​யில்லை என்​பதை இஸ்​ரேல் அதி​காரி​கள் ஒப்​புக் கொண்​டுள்​ளனர்.

இதற்​கிடையே ஈரானின் போர்க் கருவி​கள் யாருடைய உத்தரவுமின்றி ‘ஆட்டோ பைலட்’ இயக்​கத்​தில் ஏவு​கணை​களை வீசி வரு​கின்றன என்று ஈரான்​ தரப்​பில்​ கூறி​யிருப்​பது உலக நாடுகளை அதிர்ச்​சி​யடையச்​ செய்​துள்​ளது.

<div class="paragraphs"><p>ஈரான் அதிபர்  மசூத் பெசேஷ்கி​யான்</p></div>
தொழிலதிபர் அனில் அம்பானியின் ரூ.581 கோடி சொத்துகள் முடக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in