அணு ஆயுதத்தைக் கைவிட ஈரான் சம்மதம்: அமெரிக்காவுடன் விரைவில் அமைதி ஒப்பந்தம்

இருதரப்பு அதிகாரிகள் தகவல்
அணு ஆயுதத்தைக் கைவிட ஈரான் சம்மதம்: அமெரிக்காவுடன் விரைவில் அமைதி ஒப்பந்தம்
Updated on
1 min read

டெஹ்ரான்: அமெரிக்கா​வுடன் செய்து கொள்​ளும் அமைதி வரைவு ஒப்​பந்​தத்​தில், அணு ஆயுதங்​களை தயாரிக்​கவோ, வாங்கவோ மாட்டோம் என ஈரான் ஒப்புக் கொண்டுள்​ள​தாக ஈரான் அதி​காரிகள் தெரி​வித்​துள்​ளனர். அமைதி ஒப்பந்தம் ஓரிரு நாளில் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம்தேதி போர் தொடங்​கியது. அதன்​பின் இருதரப்பு இடையே கடந்த ஏப்​ரல் 8-ம் தேதி சண்டை நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்டு நீட்​டிக்​கப்​பட்டு வரு​கிறது. இருதரப்பு இடையே அமைதி மற்​றும் போர் நிறுத்​த ஒப்​பந்​தம் ஏற்​படு​வதற்​கான முயற்​சி​யில் பாகிஸ்​தான் உட்பட பல நாடு​கள் களம் இறங்​கின.

தற்​போது இருதரப்பு இடையே அமைதி வரைவு ஒப்​பந்​தம் விரை​வில் கையெழுத்​தாக​ உள்​ள​தாக அமெரிக்கா மற்​றும் ஈரான் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது குறித்து ஈரான் மூத்த அதி​காரி ஒரு​வர் கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி வரைவு ஒப்​பந்​தம் கையெழுத்​தாக​ உள்​ளது. இறுதி ஒப்​பந்​தம் குறித்து இரு தரப்​பும் 60 நாட்​களுக்​குள் விவா​தித்து முடி​வெடுக்​கும். அணு ஆயுதங்​களை உற்​பத்தி செய்​யவோ, வாங்​கவோ மாட்​டோம் என்று ஈரான் ஒப்​புக்​கொண்​டுள்​ளது.

இறுதி ஒப்​பந்​தம் எட்​டப்​படும் வரை ஈரான் தனது தற்​போதைய அணுசக்தி திட்​டத்தை அப்​படியே பராமரிக்​கும். இதில் யுரேனி​யத்தை செறிவூட்​டா​மல் இருப்​பதும், அணுசக்தி நிலை​யங்​களை விரிவுபடுத்​து​வதை தவிர்ப்​பதும் அடங்​கும். ஈரானில் இருக்​கும் செறிவூட்​டப்​பட்ட யுரேனிய இருப்பை நீர்த்​துப்​போகச் செய்​வதை அமெரிக்கா ஏற்​கும். இதற்​கான வழி​முறை​கள் குறித்து இரு தரப்​பும் 60 நாட்​களுக்​குள் விவா​திக்​கும்.

ஈரான் மீதான தடைகள் நீக்​கம்: மற்​றும் ஹார்​முஸ் ஜலசந்​தியை மீண்​டும் திறப்​பது ஆகியவை இந்த வரைவு ஒப்​பந்​தத்​தில் இடம்​பெற்​றுள்​ளன. அனைத்து வணி​கக் கப்​பல்​களுக்​கும் ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் உடனடி​யாக திறக்​கும். ஈரானிய துறை​முகங்​கள் மீதான கடற்​படை முற்​றுகையை அமெரிக்கா வாபஸ் பெறும்.

இரு தரப்​பும் இறுதி ஒப்​பந்​தத்தை எட்​டும் வரை அமெரிக்கா ஈரான் மீது புதிய தடைகளை விதிக்​காது. வாஷிங்​டன் ஒரு குறிப்​பிட்ட காலத்​துக்கு எண்​ணெய் மீதான தடைகளை தளர்த்​தும். இதன்மூலம் ஈரான் எண்​ணெய்யை விற்​க​வும், அதன் மூலம் கிடைக்​கும் வரு​வாயை பயன்​படுத்​த​வும் முடி​யும்.

25 பில்​லியன் டாலர் மதிப்​புள்ள ஈரானிய சொத்​து​களை விடுவிக்க அமெரிக்கா வழி​வகை செய்​யும். இந்த ஒப்​பந்​தம் இன்றோ அல்​லது ஒரு சில நாட்​களி​லோ கையெழுத்​தாகலாம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இந்த அமைதி ஒப்​பந்​தம் 14-ம் தேதி (நேற்று) கையெழுத்​தாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறி​வித்​திருந்​தார். ஆனால், இந்த கெடுவை நிராகரித்​துள்ள ஈரானின் வெளி​யுறவு அமைச்​சகம், வரும் நாட்​களில் இந்​த வரைவு ஒப்​பந்​தம்​ கையெழுத்​தாகலாம்​ என்​று தெரிவித்​துள்​ளது.

அணு ஆயுதத்தைக் கைவிட ஈரான் சம்மதம்: அமெரிக்காவுடன் விரைவில் அமைதி ஒப்பந்தம்
பிரான்ஸில் ‘பாரதத்தின் புதுமை கண்டுபிடிப்புகள்’ மாநாடு: அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in