ஈரான் டிரோன் தாக்குதலில் இந்தியர் உயிரிழப்பு

ஈரான் டிரோன் தாக்குதலில் இந்தியர் உயிரிழப்பு
Updated on
1 min read

டெஹ்ரான்: அமெரிக்​கா​வின் 'சேஃப்சீ டிரான்​ஸ்​போர்ட்' என்ற நிறு​வனத்​துக்கு சொந்​த​மான 'சேஃப்சீ விஷ்ணு' என்ற எண்​ணெய் கப்​பல் நேற்று முன்​தினம் இராக்​கின் பஸ்ரா துறை​முகம் அரு​கில் சென்​று ​கொண்​டிருந்​தது.

மார்​ஷல் தீவு​கள் கொடி​யுடன் சென்ற இந்​தக் கப்​பல் மீது ஈரான் ராணுவம் திடீர் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் அந்த எண்​ணெய் கப்பல் தீப்​பற்​றிய​தில் இந்​திய ஊழியர் ஒரு​வர் உயி​ரிழந்​தார். கப்பலில் இருந்த எஞ்​சிய 15 இந்​திய ஊழியர்​களும் மீட்கப்பட்டதாக பாக்​தாத்தில் உள்ள இந்​தி​யத் தூதரகம் தெரிவித்துள்​ளது.

பாரசீக வளை​கு​டா​வில் இராக் கடல் எல்​லைக்​குட்​பட்ட பகு​தி​யில் மற்​றொரு எண்​ணெய் கப்​பல் மீதும் ஈரான் நேற்று முன்​தினம் தாக்​குதல் நடத்​தி​யது. மால்டா கொடி​யுடன் வந்த இந்​தக் கப்​பல் கிரீஸ் நாட்டு தனி​யார் நிறு​வனத்​துக்கு சொந்​த​மானது.இவ்​விரு தாக்​குதல்​களுக்​கும் ஈரான் பொறுப்​பேற்​றுள்​ளது. நீருக்​கடி​யில் செல்​லும் டிரோன் மூலம் இந்த தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக ஈரான் கூறி​யுள்​ளது.

ஈரான் டிரோன் தாக்குதலில் இந்தியர் உயிரிழப்பு
மீண்டும் 100 டாலருக்கு மேல் உயர்ந்தது கச்சா எண்ணெய் விலை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in