இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா வழித்தட கனவு நனவாகும்: பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தகவல்

இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா வழித்தட கனவு நனவாகும்: பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தகவல்
Updated on
1 min read

ரோம்: பிரதமர் நரேந்​திர மோடி இரு நாட்​கள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் இத்​தாலி தலைநகர் ரோமுக்கு சென்​றார். இதையொட்டி பிரதமர் மோடி​யும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் வெளி​யிட்ட கூட்​டறிக்​கை​யில் கூறியிருப்​ப​தாவது: ஐரோப்​பிய ஒன்​றி​யத்​துக்​கும், இந்தியாவுக்கும் இடையே​யான தடை​யில்லா வர்த்தக ஒப்​பந்​தம், இரு நாடு​களி​லும் வர்த்​தகம் மற்​றும் முதலீட்டை அதி​கரிக்க வழிவகுக்​கிறது.

இரு நாடு​கள் இடையே பாது​காப்பு மற்​றும் விண்​வெளி, தூய்மையான தொழில்​நுட்​பங்​கள், இயந்​திரங்​கள், வாகன உதிரிபாகங்​கள், ரசாயனங்​கள், மருந்​துகள், ஜவுளி, உணவுதானியங்​கள், சுற்​றுலா உள்​ளிட்ட துறை​களில் ஒத்துழைப்பு அதி​கரிக்​கப்​படும். வரும் 2029-ம் ஆண்​டுக்​குள் இத்தாலி, இந்​தியா இடையே 20 பில்​லியன் யூரோ அளவுக்கு வர்த்தக இலக்கை அடைய இலக்கு நிர்​ண​யித்​துள்​ளோம்.

‘‘இத்​தாலி​யில் தயாரிக்​கப்​பட்​டது’’ என்​பது உலகள​வில் ஓர் அடையாள​மாக விளங்கி வரு​கிறது. இப்​போது, ‘‘இந்​தி​யா​வில் உற்பத்தி செய்​தல்’’ என்ற முன்​முயற்​சி​யில் இணை​கிறோம். இந்தியாவின் உற்​பத்தி துறை​யில் இத்​தாலிய வணி​கங்​களின் ஆர்வம் அதி​கரித்து வரு​கிறது. இதே​போல இத்​தாலி உற்​பத்​தித் துறை​யில் 1000-க்​கும் மேற்​பட்ட இந்​திய நிறு​வனங்​கள் கால்பதித்துள்​ளன. இவை எங்​களது விநி​யோகச் சங்​கி​லிகளின் ஒருங்​கிணைப்பை வலுப்​படுத்​தும் நேர்​மறை​யான அறிகுறியாகும்.

இந்​தி​யா-மத்​திய கிழக்​கு-ஐரோப்பா பொருளா​தார வழித்தடத்தின் (ஐஎம்​இசி) மூலம் நவீன போக்​கு​வரத்​து, உள்​கட்டமைப்​பு, டிஜிட்​டல் வலை​யமைப்​பு​கள், எரிசக்தி கட்டமைப்புகள் மேம்​படும். ஐஎம்​இசி என்ற தொலைநோக்கு திட்டத்தை நனவாக்க இந்​தி​யா​வும், இத்​தாலி​யும் இதர ஐரோப்​பிய நாடு​களும் இணைந்து கூட்​டாக செயல்​படும். எங்​கள் நாடுகளுக்கு இடையே​யான ஆழமான கூட்​டாண்மை மற்​றும் நீடித்த கலாச்​சா​ரப் பிணைப்​பு​களைப் பயன்​படுத்​தி, எங்​கள் பொது​வான சவால்​களை எங்​களால் எதிர்​கொள்ள முடி​யும். இந்தியக் கலாச்​சா​ரத்​தில், ‘தர்​மம்' எனும் கருத்​துரு, எங்​கள் செயல்களுக்கு வழி​காட்​டு​கிறது.

ஒன்​றோடொன்று இணைக்​கப்​பட்ட டிஜிட்​டல் யுகத்​தில், ‘உல​கம் ஒரு குடும்​பம்​—என்ற இந்​தி​யா​வின் கொள்கை வலிமை​யாக எதிரொலிக்​கிறது. இத்​தகைய மாண்​பு​கள், மறுமலர்ச்​சிக் காலத்தில் வேரூன்​றிய இத்​தாலி​யின் மனிதநேயப் பாரம்​பரியத்தில் இயல்​பாகவே பிர​திபலிக்​கின்​றன. அது ஒவ்​வொரு தனி​நபரின் மாண்​பை​யும், மக்​களை​யும், சமூகங்​களை​யும் ஒன்றிணைக்​கும் கலாச்​சா​ரத்​தின் ஆற்​றலை​யும் எடுத்துக்காட்டுகிறது.

எனவே, எங்​கள் பகிரப்​பட்ட தொலைநோக்​குப் பார்​வை, மக்​களை மைய​மாகக் கொண்​டு, ஒரு வலிமை​யான மற்​றும் முற்​போக்​கான இந்​தி​ய-இத்​தாலி கூட்​டாண்​மைக்கு அடித்​தளம் அமைப்​போம். இவ்​வாறு அந்த கூட்​டறிக்​கை​யில்​ தெரி​விக்​கப்​பட்​டு உள்​ளது.

இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா வழித்தட கனவு நனவாகும்: பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தகவல்
“ஈரான் விவகாரத்தில் நான் சொல்வதைத்தான் நெதன்யாகு செய்வார்” - ட்ரம்ப் பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in