இஸ்ரேல், வளைகுடா நாடுகளில் ஈரான் தீவிர தாக்குதல்: ட்ரம்ப் எச்சரித்த நிலையில் பதிலடி

இஸ்ரேலில் இன்று ஈரான் தாக்குதலுக்கு உள்ளான இடம்.

இஸ்ரேலில் இன்று ஈரான் தாக்குதலுக்கு உள்ளான இடம்.

Updated on
1 min read

தெஹ்ரான்: “ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவில்லை என்றால் ஈரானுக்கு நரகத்தைக் காட்டுவோம்,” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து, ஈரான் இன்று (ஏப்ரல் 6) இஸ்ரேல், வளைகுடா நாடுகள் உள்ளிட்ட மேற்கு ஆசியா முழுவதும் தீவிர தாக்குதல்களை நடத்தியதுடன், “பேரழிவை ஏற்படுத்தும் பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும்” என்றும் எச்சரித்துள்ளது.

முன்னதாக ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையில், “ஈரான் 48 மணி நேரத்துக்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்யுங்கள் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து விடுங்கள். இல்லாவிட்டால் ஈரான் நரகமாக மாறும்” எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தனது தாக்குதலை தீவிரமாக்கியுள்ளது. இஸ்ரேல், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீது இன்று (ஏப்ரல் 6) அதிகாலையில் இருந்தே தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளது.

ட்ரம்ப்பின் மிரட்டல்களுக்கு பதிலளித்த ஈரான், “எங்கள் எதிரிகள் பொதுமக்கள் இலக்குகளைத் தாக்கினால், மிகவும் பேரழிவை ஏற்படுத்தும் பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும்” என்று எச்சரித்துள்ளது.

ஈரானில் 45 நாள் போர் நிறுத்தத்திற்கு ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால், ஈரான் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறது.

ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானத்தில் இருந்து காணாமல் போன விமானி நேற்று மீட்கப்பட்டதை ட்ரம்ப் பெருமிதமாக தெரிவித்ததுடன், ஈரான் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

இன்று வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்த நிலையில், தங்கள் பகுதியை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் தாக்குதலை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குவைத் கூறியுள்ளது.

ஒரு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்குத் தங்கள் வான் பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகமும் திங்களன்று கூறியது. ஈரானிலிருந்து தங்கள் நாட்டை நோக்கி ஏவப்பட்ட புதிய ஏவுகணை தாக்குதலை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவமும் தெரிவித்தது.

ஐக்கிய அரபு அமீரக அதிபரின் ஆலோசகர் அன்வர் கர்காஷ், “ஈரானின் அரபு அண்டை நாடுகளைக் குறிவைப்பது உண்மையில் அமெரிக்காவின் பங்கை வலுப்படுத்தும். ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு அமெரிக்க தலைமையிலான முயற்சி, சர்வதேச முயற்சியிலும் சேர ஐக்கிய அரபு அமீரகம் தயாராக உள்ளது” என்று கூறினார்.

<div class="paragraphs"><p>இஸ்ரேலில் இன்று ஈரான் தாக்குதலுக்கு உள்ளான இடம்.</p></div>
அமெரிக்க ராணுவ தோல்வியை நியாயப்படுத்த ட்ரம்ப் முயற்சி: விமானி மீட்பு விளக்கத்துக்கு ஈரான் பதிலடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in