ட்ரம்ப்

ட்ரம்ப்

“நான் தான் போரை நிறுத்தினேன்” - இந்தியா, பாக். மோதல் குறித்து மீண்டும் ட்ரம்ப் கருத்து!

Published on

பென்சில்வேனியா: இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று மீண்டும் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஏற்கெனவே அவர் இவ்வாறாக 70 முறை கூறிவிட்டதாக விமர்சனங்கள் உள்ள நிலையில் அதை உறுதிப்படுத்துவது போலவே மீண்டும் அதனைக் கூறியுள்ளார் ட்ரம்ப்.

பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த ஒரு பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ட்ரம்ப் கூறியதாவது: கடந்த 10 மாதங்களில் நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். கொசோவா - செர்பியா, பாகிஸ்தான் - இந்தியா, இஸ்ரேல் - ஈரான், எகிப்து - எதியோபியா, அர்மேனியா - அசர்பைஜான், கம்போடியா - தாய்லாந்து போர்களை நான் நிறுத்தியுள்ளேன்.

அண்மையில் மீண்டும் கம்போடியா - தாய்லாந்து இடையே புகைச்சல் ஏற்பட்டது. நான் அவர்களுக்கு போன் கால் செய்து போரை நிறுத்தச் சொல்லப்போகிறேன். இப்படித்தான் இரண்டு சக்திவாய்ந்த நாடுகள் இடையேயான போரையும் தொலைபேசியில் பேசி நிறுத்தினேன். இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.

காஷ்மீரில் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்த மோதல் முற்றியது. மே 10-ம் தேதி அன்று இந்தியா - பாகிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார். அதன்பின்னர் பலமுறை ட்ரம்ப் தனது தலையீட்டால் தான் இந்தியா - பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்ததாகக் கூறிவருகிறார். இந்தியாவும் அதனைத் திட்டவட்டமாக மறுத்துவருகிறது. இந்நிலையில் இப்போது மீண்டும் அதே கருத்தைக் கூறியுள்ளார் ட்ரம்ப்.

குடியேற்ற விதிகளில் கட்டுப்பாடு விதித்தது தொடர்பாக பேசிய ட்ரம்ப், “கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக நம் நாட்டில் இப்போது ‘ரிவர்ஸ் மைக்ரேஷன்’ நடந்து வருகிறது. இதனால், அமெரிக்கர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு, நல்ல சம்பளம், கூடுதல் வருமானம் கிடைக்கிறது. ‘சட்டவிரோத ஏலியன்களுக்கு’ சென்ற வாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கு மடைமாறியுள்ள்து. மூன்றாம் உலக நாடுகளான ஆப்கானிஸ்தான், ஹைட்டி, சோமாலியா உள்ளிட்ட 19 நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்காவுக்கு குடியேறுவதை நிரந்தரமாகத் தடுத்துள்ளேன்.

ஆம், நம் நாட்டுக்குள் நார்வே, ஸ்வீடனில் இருந்தும், டென்மார்க்கில் இருந்தும் சிலர் வரட்டுமே. சோமாலியா போன்ற அழுக்கான, அசிங்கமான, அருவருப்பான, குற்றங்கள் நிறைந்த நாடுகளில் இருந்துதான் அமெரிக்காவுக்கு வரவேண்டுமா?. நல்ல மக்கள் வரட்டும்.” என்றார்.

மூன்றாம் உலக நாடுகள் எவை? 3-ம் உலக நாடு​களில் இருந்து புலம்​பெயர்​வோருக்கு நிரந்​தரத் தடை விதிக்கப்படும் என ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார். அமெரிக்​கா, அதன் நட்பு நாடு​கள், தொழில்​வளர்ச்சி பெற்ற நாடு​கள் முதல் உலக நாடு​கள் என்று அழைக்​கப்​படுகின்​றன. ரஷ்​யா, சீனாவை சார்ந்த நாடு​கள் இரண்​டாம் உலக நாடு​கள் என்று கூறப்​படு​கின்​றன.

இந்த 2 அணி​யிலும் இல்​லாத, வளர்ந்து வரும் அல்​லது பின்​தங்​கிய ஆப்​பிரிக்க, ஆசிய, லத்​தீன் அமெரிக்க நாடு​கள் மூன்​றாம் உலக நாடு​கள் என அழைக்​கப்​படு​கின்​றன.

தற்​போதைய மூன்​றாம் உலக நாடு​கள் பட்​டியலில் ஆப்​கானிஸ்​தான், ஈரான், மியான்​மர், காங்​கோ, கியூ​பா, எரித்​திரி​யா, ஹைதி, வெனிசுலா, சோ​மாலி​யா, சூ​டான் உள்​ளிட்​ட சில ​நாடு​கள்​ இடம்​பெற்​றுள்​ளன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in