ஷாங்காய் விமான நிலையத்தில் இந்திய பெண் பயணி அலைக்கழிப்பா? - சீனா மறுப்பு

பெமா வாங் தாங்​டாக்

பெமா வாங் தாங்​டாக்

Updated on
2 min read

பெய்ஜிங்: அருணாச்சலப் பிரதேசத்தினரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது என்று கூறி, ஷாங்காய் விமான நிலையத்தில் இந்திய பெண் பயணி அலைக்கழிக்கப்பட்டதாக எழுந்த புகாரை மறுத்துள்ள சீனா, அனைத்து செயல்களும் சட்டப்படியும் விதிமுறைகளின்படியுமே நடந்ததாகத் தெரிவித்துள்ளது.

அருணாச்​சலப் பிரதேசத்தை சேர்ந்​த பெமா வாங் தாங்​டாக் என்பவர், லண்​டனில் இருந்து ஜப்​பான் சென்​றுள்​ளார். வழி​யில் சீனாவின் ஷாங்​காய் விமான நிலை​யத்​தில் இறங்கி 3 மணி நேரத்துக்​குப்​பின் மாற்று விமானத்தில் ஜப்பான் செல்ல திட்டமிட்டுள்ளார். கடந்த 21-ம் தேதி இவர் ஷாங்​காய் விமான நிலை​யத்​தில் தரை​யிறங்​கிய​போது, இவரது இந்​திய பாஸ்​போர்ட் செல்​லாது என சீன குடியுரிமை அதி​காரி​களும், சீன ஈஸ்டர்ன் ஏர்​லைன்ஸ் நிறுவன அதி​காரி​களும் கூறி​யுள்​ளனர். காரணம் அவரது பாஸ்​போர்ட்​டில் பிறந்த இடம் அருணாச்​சலப் பிரதேசம் என குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

அருணாச்​சலப் பிரதேசம் சீனா​வில் இருக்​கும் பகுதி எனக் கூறி, அவரது இந்​திய பாஸ்​போர்ட் செல்​லாது என கூறி பெமா வாங்கை சீன அதி​காரி​கள் கைது செய்​துள்​ளனர். 18 மணி நேரத்​துக்கும் மேலாக அவர் ஷாங்​காய் விமான நிலை​யத்​தில் சிறைவைக்​கப்​பட்டார். விமான நிலையத்தில் உள்ள உணவு விடுதி மற்​றும் இதர வசதிகளை பெமா வாங் பயன்​படுத்தவும் அனு​ம​திக்​க​வில்லை. பின்​னர் லண்​டனில் உள்ள நண்​பர் மூலம் ஷாங்​காய் நகரில் உள்ள இந்​திய தூதரகத்தை பெமா வாங் தொடர்பு கொண்​டதை அடுத்து, இந்​திய தூதரக அதி​காரி​கள் தலை​யிட்டு அவரை ஜப்​பானுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

"இது இந்​திய இறை​யாண்மை மீதான நேரடி தாக்​குதல். இந்த விவ​காரம் குறித்து பிரதமர் மோடி​யும், இந்​திய அதி​காரி​களும் சீன அரசுடன் பேச வேண்​டும். அருணாச்​சலப் பிரதேசத்தை சேர்ந்த இந்​தி​யர்​கள் வெளி​நாடு​கள் செல்​லும்போது, அவர்​களின் பாது​காப்​புக்கு உத்​தர​வாதம் அளிக்​கப்பட வேண்​டும்" என பெமா வாங் தாங்​டாக் கூறி இருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், "அந்தப் பெண் கூறியதுபோல அவர் தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை. துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படவில்லை. அவர் ஓய்வெடுக்க, குடிக்க, உணவு உட்கொள்ள விமான நிறுவனம் ஓர் இடத்தை வழங்கியது.

சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி முழு செயல்முறைகளையும் சீனாவின் எல்லை ஆய்வு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். மேலும், அவரின் சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் நலன்களை அவர்கள் முழுமையாக பாதுகாத்துள்ளனர் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். மேலும், அருணாச்சலப் பிரதேசத்தை சீனா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. அது சீனாவின் ஜங்னான் பிரதேசம்" என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சம்பவம் நடந்த அதே நாளில் சீனாவுக்கு எதிராக இந்தியா வலுவான ராஜதந்திர எதிர்ப்பை பதிவு செய்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அருணாச்சலப் பிரதேசம் சந்தேகத்துக்கு இடமின்றி இந்திய பகுதி என்றும் அதில் வசிப்பவர்கள் அனைவரும் இந்திய குடிமக்கள் என்றும் அவர்கள் இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருக்கவும் பயணிக்கவும் முழு உரிமை பெற்றவர்கள் என்றும் சீன தரப்புக்கு உறுதியாக தெரிவித்ததாக அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

மேலும், ஷாங்காயில் உள்ள இந்திய தூதரகம் இந்த விவகாரத்தை உள்ளூர் மட்டம் அளவில் எடுத்துக்கொண்டு சிக்கித் தவித்த பயணிக்கு முழு உதவியை வழங்கியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>பெமா வாங் தாங்​டாக்</p></div>
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்: நவ.30-ல் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in