ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் முன்னாள் அதிகாரி கைது: இலங்கை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் முன்னாள் அதிகாரி கைது: இலங்கை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு
Updated on
1 min read

கொழும்பு: இலங்​கை​யில் கடந்த 2019 ஏப்​ரல் 21-ம் தேதி ஈஸ்​டர் ஞாயிறு அன்று தேவால​யங்​கள், நட்​சத்​திர ஓட்​டல்​களில் தற்கொலைப் படை தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதில் 11 இந்தியர்கள் உட்பட 270-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​தனர்.

ஐஎஸ்​ஐஎஸ் உடன் தொடர்​புடைய உள்ளூரைச் சேர்ந்த தேசிய தவ்​ஹீத் ஜமாத் என்ற தீவிரவாத அமைப்பு தாக்​குதல் நடத்​தி​ய​தாக தெரிய​வந்​தது. இந்த வழக்​கில் முன்​னாள் உளவுத் துறை தலை​வர் சுரேஷ் சாலே நேற்று முன்​தினம் கைது செய்​யப்​பட்​டார். ஈஸ்​டர் தாக்​குதல் நடந்​த​போது சுரேஷ் சாலே வெளி​நாட்​டில் தூதரகப் பணி​யில் இருந்​தார். 2015-க்கு முன் மகிந்த ராஜபக்ச அரசில் உளவுத் துறை தலை​வ​ராக இருந்​தார்.

இதுகுறித்து திருச்​சபை செய்​தித் தொடர்​பாளர் சிரில் காமினி கூறுகை​யில், “கோத்​த பய ராஜபக்ச ஆட்​சி​யில் இந்த வழக்கு விசாரணை திட்டமிட்டு நிறுத்​தப்​பட்​டது. தற்​போதைய அரசின் முறை​யான விசா​ரணை காரண​மாக கைது நடவடிக்கை மேற்கொள்​ளப்​பட்​டுள்​ளது. நம்​பக​மான ஆதா​ரங்​களின் அடிப்படை​யில் சாலே கைது செய்​யப்​பட்​டுள்​ள​தாக நம்​பு​கிறோம்" என்று தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் முன்னாள் அதிகாரி கைது: இலங்கை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு
தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in