

ஜெருசலேம்: ஈரானில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு 3,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அமெரிக்க படைகள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் கூறியுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட தகவலில், ‘‘இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். அவசர உதவி தேவைப்பட்டால் இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளது. இதேபோல் இஸ்ரேலில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து தூதரகங்களும் தங்கள் நாட்டினரை எச்சரித்துள்ளன.