போருக்குப் பிறகு முதன்முறையாக ஈரானில் விமான சேவை தொடக்கம்

போருக்குப் பிறகு முதன்முறையாக ஈரானில்  விமான சேவை தொடக்கம்
Updated on
1 min read

தெஹ்ரான்: இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் போர் தொடங்கிய பிறகு முதன்முறையாக, தெஹ்ரானின் இமாம் காமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஈரான் சனிக்கிழமையன்று விமான சேவைகளை மீண்டும் தொடங்கியது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தற்சமயம் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், தெஹ்ரானில் இருந்து ஈரான் வர்த்தக ரீதியான விமான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. தெஹ்ரானில் இருந்து இஸ்தான்புல், ஓமனில் உள்ள மஸ்கட் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள மதீனா ஆகிய இடங்களுக்கு விமானங்கள் புறப்பட்டதாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. போர் நிறுத்தம் ஏற்பட்ட பின்னர், இந்த மாத தொடக்கத்தில் ஈரானின் வான்வெளி பகுதியளவு திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்காக வெள்ளிக்கிழமை இரவு இஸ்லாமாபாத் சென்ற ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தானின் உயர்மட்ட ராணுவ மற்றும் அரசியல் தலைவர்களுடன் இரண்டு சுற்று சந்திப்புகளை நடத்திய நிலையில் வர்த்தக விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. சனிக்கிழமையன்று அமெரிக்கத் தூதர்கள் இஸ்லாமாபாத் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், ஈரான் தூதுக்குழு மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடரும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரானுடனான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் முயற்சியாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரை பாகிஸ்தானுக்கு அனுப்புவார் என்று வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது. இருப்பினும், அராக்சி வந்தடைந்த சிறிது நேரத்திலேயே, அமெரிக்கப் பிரதிநிதிகளுடனான எந்தவொரு தொடர்பும் மறைமுகமாகவே இருக்கும் என்றும், பாகிஸ்தான் அதிகாரிகள் இரு தரப்பினருக்கும் இடையே செய்திகளைப் பரிமாறிக்கொள்வார்கள் என்றும் ஈரான் கூறியது.

இந்த வார தொடக்கத்தில் ட்ரம்ப் போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த பின்னர், அமெரிக்காவையும் ஈரானையும் மீண்டும் பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவர பாகிஸ்தான் முயன்று வருகிறது.

போருக்குப் பிறகு முதன்முறையாக ஈரானில்  விமான சேவை தொடக்கம்
ஈரான் போர் தாக்கம்: அமெரிக்காவின் ஆயுத கையிருப்பு கணிசமாகக் குறைந்தது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in