நிலக்​கரி சுரங்க எரிவாயு வெடி விபத்து: சீனாவில் 90 தொழிலாளர்கள் உயிரிழப்பு; 200 பேர் மீட்பு

நிலக்​கரி சுரங்க எரிவாயு வெடி விபத்து: சீனாவில் 90 தொழிலாளர்கள் உயிரிழப்பு; 200 பேர் மீட்பு
Updated on
1 min read

பெய்ஜிங்: சீ​னா​வில் உள்ள ஒரு நிலக்​கரி சுரங்​கத்​தில் ஏற்​பட்ட எரி​வாயு வெடி விபத்​தில் 90 தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​தனர்.

சீனா​வின் வட பகு​தி​யில் உள்ள ஷான்சி மாகாணம் கின்​யு​வான் கவுண்​டி​யில் உள்ள லியுஷென்யு நிலக்​கரி சுரங்​கத்​தில் வெள்​ளிக்​கிழமை மாலை எரி​வாயு வெடி விபத்து ஏற்​பட்​டது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்​புப் படை​யினர் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று மீட்பு மற்​றும் நிவாரணப் பணி​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

மீட்​புப் பணி​யின் போது நேற்று மாலை வரை 90 பேர் சடலங்​களாக மீட்​கப்​பட்​ட​தாக​வும் 200-க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் உயிருடன் மீட்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் அந்​நாட்டு அரசின் ‘சீனா டெய்​லி' செய்தி வெளி​யிட்​டுள்​ளது. காயமடைந்​தவர்​கள் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். மீட்​புப் பணி​கள் தொடர்ந்து நடை​பெற்று வரு​கின்​றன.

இதனிடையே, விபத்​தில் சிக்​கிய​வர்​களை முழு​மை​யாக மீட்​ப​தற்​கும், காயமடைந்​தவர்​களுக்கு உரிய சிகிச்சை அளிப்​ப​தற்​கும் சீன அதிபர் ஜி ஜின்​பிங் உத்​தர​விட்​டுள்​ளார்.

விபத்​துக்​குப் பிந்​தைய பணி​களைச் சரி​யாகக் கையாள வேண்​டும் எனக் கேட்​டுக் கொண்ட அவர், விபத்​துக்​கான காரணம் குறித்து விரி​வான விசா​ரணை நடத்​தப்பட வேண்​டும் என்​றும், சட்​டத்​தின்​படி இதற்​குக் காரண​மானவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்பட வேண்​டும் என்​றும் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

நாடு முழு​வதும் உள்ள அதி​காரி​கள் இந்த விபத்​தில் இருந்து பாடம் கற்​றுக் கொள்ள வேண்​டும் என்​றும், பணி​யிடப் பாது​காப்​பில் விழிப்​புடன் இருக்க வேண்​டும் என்​றும் ஜி ஜின்​பிங் வலி​யுறுத்​தி​யுள்​ளார். மேலும், பெரிய விபத்​துகளைத் தடுக்க, சாத்​தி​ய​மான அபா​யங்​களைக் கண்​டறிந்து அவற்றை அகற்​று​வதற்​கான முயற்​சிகளைத் தீவிரப்​படுத்த வேண்​டும் என்​றும் அவர் கூறி​யுள்​ளார்.

பிரதமர் மோடி இரங்கல்: பிரதமர் நரேந்​திர மோடி எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “சீன சுரங்​கத்​தில் ஏற்​பட்ட விபத்​தில் 90 பேர் உயி​ரிழந்த செய்தி அறிந்து வேதனை அடைந்​தேன். இந்​தி​யர்​கள் சார்​பாக அதிபர் ஜி ஜின்​பிங்​குக்​கும் சீன மக்​களுக்​கும் எனது ஆழ்ந்த இரங்​கலை​யும் அனு​தாபங்​களை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன்’’ என கூறி​யுள்​ளார்​.

நிலக்​கரி சுரங்க எரிவாயு வெடி விபத்து: சீனாவில் 90 தொழிலாளர்கள் உயிரிழப்பு; 200 பேர் மீட்பு
மத்திய அரசு வேலைக்கு தேர்வான 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in