வியட்நாம் எல்லையில் ரோந்து பணிக்கு மனித ரோபோக்களை அனுப்புகிறது சீனா

‘வாக்கர் எஸ்2’ ரோபோக்கள்.

‘வாக்கர் எஸ்2’ ரோபோக்கள்.

Updated on
1 min read

சென்​ஜென்: வியட்நாம் எல்​லை​யில் ரோந்து பணிக்கு மனித ரோபோக்​களை ஈடு​படுத்த சீனா முடிவு செய்துள்ளது. சீனா​வின் சென்​ஜென் மாகாணத்​தில் உள்​ளது யுபிடெக் ரோபோட்​டிக்ஸ் நிறு​வனம்.

இது தொழில்​சாலைகள் மற்​றும் பொது சேவை​களுக்கு மனித ரேபோக்​களை உரு​வாக்கி தரு​கிறது. இந்​நிலை​யில் இந்​நிறு​வனத்​திடம் எல்​லை​யில் ரோந்து பணியை மேற்​கொள்​ளும் வகை​யில் ‘வாக்​கர் எஸ்2’ என்ற மனித ரோபோக்​களை தயாரித்து கொடுக்க 37 மில்​லியன் டாலருக்கு சீன அரசு ஒப்​பந்​தம் செய்​தது.

இதையடுத்து செயற்கை நுண்​ணறிவு கட்​டுப்​பாட்​டில் இயங்​கும் வகையி​லான ரோபோக்​களை யுபிடெக் இன்​ஜினீயர்​கள் உரு​வாக்​கினர். இந்த ரோபோக்​களை வியட்நாம் எல்லை அருகே குவாங்சி பகு​தி​யில் உள்ள ஃபேங்​செங்​காங் என்ற கடலோர பகு​தி​யில் ரோந்து பணி​யில் சீனா ஈடு​படுத்​தவுள்​ளது.

இந்த மனித ரோபோக்​கள் பயணி​களை வரிசை​யாக நிற்​கவைக்​க​வும், எளிமை​யான கேள்வி​களுக்கு பதில் அளிக்​கும் வகை​யிலும், வாக​னங்​களை ஒழுங்​குபடுத்​த​வும், எல்லை பணி​யாளர்​களுக்கு உதவி​யாகவும் செயல்​படும்.

சரக்கு முனை​யத்​தில் பணி​யாளர்​களுக்கு உதவுவது, கன்​டெய்​னர்​களின் ஐ.டி.க்​களை சரி​பார்ப்​பது, சீல்​களை உறுதி செய்து தவகல் அனுப்​புவது போன்ற பணி​களில் இந்த மனித ரோபோக்​கள் ஈடு​படுத்​தப்​படும். இவை நம்​பக​மான முறை​யில் செய​லாற்​றி​னால், இவை விமான நிலை​யம், துறை​முகம், ரயில் நிலை​யங்​களில் பயன்​படுத்​தப்​படலாம்​ என கூறப்படுகிறது.

<div class="paragraphs"><p>‘வாக்கர் எஸ்2’ ரோபோக்கள். </p></div>
வணிகச் சுற்றுலா தொடர்பாக ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் இந்தியாவுக்கு முக்கியத்துவம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in