

பேங்காக்: சீனாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 140.4 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 30 லட்சம் குறைவாகும். 2025-ஆம் ஆண்டில் பிறந்த குழந்தை பிறப்பு எண்ணிக்கை வெறும் 79.2 லட்சமாக மட்டுமே பதிவாகியுள்ளது.
இது முந்தைய 2024-ம் ஆண்டை விட 16.2 லட்சம் அதாவது 17 சதவீதம் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து 2024-இல் பிறப்பு விகிதத்தில் தென்பட்ட சிறிய முன்னேற்றம் ஒரு நிலையான மாற்றம் அல்ல என்பது தெரியவந்துள்ளது.
சீனா பல தசாப்தங்களாக "ஒரே குழந்தை" கொள்கையை பின்பற்றியது. இப்போது மக்கள் தொகை சரிவைத் தடுக்க, 2015-ல் 2 குழந்தைகளுக்கும், 2021-ல் மூன்று குழந்தைகளுக்கும் சீனா அனுமதி அளித்தது. குழந்தை பெறுவோருக்கு ஊக்கத் தொகையும் அளித்தது. எனினும் குழந்தை பிறப்பு சரிந்துள்ளது.