“வங்கதேசத்துக்காக என்னிடம் ஒரு திட்டம் உள்ளது” - கவனம் ஈர்த்த தாரிக் ரஹ்மானின் முதல் உரை!

Tarique Rahman's I have a plan speech

தாரிக் ரஹ்மான்

Updated on
2 min read

டாக்கா: “எனது நாட்டுக்காக என்னிடம் ஒரு திட்டம் உள்ளது. மக்கள் நீண்டகாலமாக விரும்பிய பாதுகாப்பான நாடாக வங்கதேசத்தை மாற்றுவதே அது. வங்கதேசம் முஸ்லிம்கள், இந்துக்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் சொந்தமானது.” என்று வங்​கதேச முன்​னாள் பிரதமர் கலீதா ஜியா​வின் மகனும், வங்​கதேச தேசி​ய​வாத கட்​சி​யின் (பிஎன்​பி) செயல் தலை​வருமான தாரிக் ரஹ்​மான் தெரிவித்துள்ளார்.

17 ஆண்​டு​களுக்குப் பிறகு தாரிக் ரஹ்​மான் நேற்று ​நா​டு திரும்பி​னார். டாக்கா விமான நிலை​யத்​தில் லட்சக்கணக்கான பிஎன்பி தொண்​டர்​கள் திரண்டு வந்து, தாரிக் ரஹ்​மானை வரவேற்​றனர். அவரது மனைவி ஜூபை​தா, மகள் ஜைமா ஆகியோ​ரும் உடன் வந்​தனர். குண்டு துளைக்​காத பேருந்​தில் தாரிக் ரஹ்​மானும் குடும்​பத்​தினரும் டாக்​கா​வில் உள்ள வீட்​டுக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டனர்.

இந்நிலையில், பூர்பாச்சல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தாரிக் ரஹ்மான், ‘‘எனது நாட்டுக்காக என்னிடம் ஒரு திட்டம் உள்ளது. மக்கள் நீண்டகாலமாக விரும்பிய பாதுகாப்பான நாடாக வங்கதேசத்தை மாற்றுவதே அது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த நாடு மலைகளில் வசிப்பவர்களுக்கும், சமவெளிப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும், பவுத்தர்களுக்கும் மற்றம் கிறிஸ்தவர்களுக்கும் சொந்தமானது.

ஒவ்வொரு பெண்ணும், ஆணும், குழந்தையும் வீட்டை விட்டு வெளியே சென்று பாதுகாப்பாகத் திரும்பக்கூடிய ஒரு பாதுகாப்பான தேசமாக வங்கதேசத்தை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாராக இருந்தாலும் வங்கதேசத்தின் அமைதியையும் கண்ணியத்தையும் நிலைநிறுத்துவதே எப்போதும் நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாம் விரும்பும் வங்கதேசத்தை உருவாக்குவோம்.

நாம் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மதத்தை நம்புபவர்களாக இருந்தாலும், கட்சி சாராதவர்களாக இருந்தாலும் அனைவரும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க ஒன்றிணைய வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

வங்கதேசத்தில் மாணவர்​களின் போராட்​டத்​தால் பிரதமர் பதவியை ராஜி​னாமா செய்த ஷேக் ஹசீனா இந்​தி​யா​வில் தஞ்​சமடைந்​தார். வங்கதேசத்தில் தற்​போது முகமது யூனுஸ் தலைமையி​லான இடைக்​கால அரசு உள்ளது. அங்கு பிப்​.12-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. தற்​போதைய சூழலில் வங்​கதேச தேசி​யவாத கட்சி (பிஎன்​பி), மாணவர் சங்​கங்​கள் உரு​வாக்​கிய தேசிய மக்​கள் கட்சி (என்​சிபி), அடிப்​படை​வாத கட்சியான ஜமாத் - இ – இஸ்​லாமி ஆகியவை தேர்​தல் களத்​தில் உள்​ளன.

கடந்த 2008-ம் ஆண்டு செப்​டம்​பரில் மனை​வி, குழந்​தை​யுடன் இங்கிலாந்து தலைநகர் லண்​டனில் குடியேறிய தாரிக் ரஷ்மான், சுமார் 17 ஆண்​டு​கள் அரசி​யல் துறவறம் பூண்​டிருந்தார். தற்போது நாடு திரும்பியுள்ள அவர், வரும் பொதுத்​தேர்​தலில் பிஎன்பி கட்​சி​யின் பிரதமர் வேட்​பாள​ராக களமிறங்​கு​கிறார்.

பிப்​ர​வரி 12-ம் தேதி பொதுத்​தேர்​தலில் ஹசீ​னா​வின் கட்சி போட்​டி​யிட தடை வி​திக்​கப்பட்டு உள்ள நிலை​யில் பிஎன்​பி வெற்​றிபெற்​று கலீ​தா ஜியா​வின்​ மகன் தா​ரிக்​ ரஹ்​மான்​ பிரதம​ராக பதவி​யேற்​க வாய்ப்​பு உள்ள​தாக அரசியல்​ நோக்​கர்​கள் தெரிவித்துள்ளனர்.

Tarique Rahman's I have a plan speech
“இந்து இளைஞர் கொலை பின்னணியில் மதம் சார்ந்த காரணங்கள் இல்லை” - வங்கதேச அரசு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in