பிரதமர் அளித்த விருந்தை ருசித்து சாப்பிட்ட தலைவர்கள்

பிரதமர் அளித்த விருந்தை ருசித்து சாப்பிட்ட தலைவர்கள்
Updated on
1 min read

போர்ட் மோரெஸ்பி: இந்திய - பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மாநாட்டில், அந்நாடுகளின் தலைவர்களுக்குப் பிரதமர் மோடி மதிய விருந்தளித்தார்.

அதில் இந்திய உணவு வகைகள் மற்றும் சிறுதானியங்களான வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளும் அடங்கியிருந்தன. அவற்றை பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்கள் ருசித்து சாப்பிட்டனர்.

இந்த விருந்தில் இனிப்பு வகையான கந்த்வி, சிறுதானியங்கள் மற்றும் காய்கறி சூப், மலாய் கப்தா, ராஜஸ்தானின் ராகி கட்டா கறி, தால் பஞ்ச்மெல், சிறுதானிய பிரியாணி, நன்னு புல்கா, மசாலா சாஸ், பான் குல்பி, மல்புவா, மசாலா டீ, கிரீன் டீ, புதினா டீ, காபி வகைகள் அடங்கியிருந்தன. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 2023-ம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. அறிவித்தது.

அதன்பின் உலகளவில் பல்வேறு நாட்டின் தலைவர்கள் பிரபலங்கள் சிறு தானிய உணவு வகைகளை சாப்பிட்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். தற்போது சிறுதானியங்களின் உற்பத்தி, விற்பனை அதிகரிக்க தொடங்கி உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in