

ஆப்பிரிக்க நாடான சோமாலியா தலைநகர் மோகாதிஷுவில் பிரபல விடுதிக்கு அருகில் ஏற்பட்ட பயங்கர குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 260 பலியாகியுள்ளனர்.
இந்தக் குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சோமாலிய வரலாற்றில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இந்தத் தீவிரவாதத் தாக்குதல் கருதப்படுகிறது.
சோமலியா தலைநகர் மோகாதிஷீவிலலுள்ள சஃபாரி கடந்த சனிக்கிழமையன்று தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 260 பேர் பலியாகினர். 300க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டிட இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளார்களா? என்று மீட்ப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இத்தாக்குதல் குறித்து சோமாலியாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஆபிரகாம் ஒஸ்மான் கூறும் போது, "அப்பாவி பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய இத்தாக்குதல் காட்டுமிரண்டித்தனமானது" என்று கூறியுள்ளார்.
துருக்கி மற்றும் கென்யா, சோமாலியாவுக்கு மருத்துவ உதவிகள் செய்ய முன் வந்துள்ளன.
இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சோமாலிய அரசுக்கு எதிராக அல் கொய்தாவுடன் இணைக்கப்பட்டுள்ள அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்தினர், பெரும்பாலும் ஹோட்டல்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் என குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சோமாலியாவில் செயல்பட்டு வருல் அல் ஷபாப் இயக்கத்துக்கு எதிராக அமெரிக்க ராணுவத்தினர் இந்த ஆண்டு முதல் வான்வழித் தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.