

வியட்னாமில் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்துக்கு இதுவரை 37 பேர் பலியாகியுள்ளனர். 40 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதுகுறித்து வியட்னாம் தேசிய பேரிடர்த் தடுப்பு மையம் தரப்பில், "வியட்னாமில் மத்திய மற்றும் வடக்கு மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்துக்கு இதுவரை 37 பேர் பலியாகியுள்ளனர்.
40 பேர் காணாமல் போயுள்ளனர். 17,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக 8,000 ஹெக்டேர் வரை பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் 40,000 விலங்குகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் வியட்னாம் அரசு தெரிவித்துள்ளது.
வியட்னாமைப் பொறுத்தவரை அந்த நாடு நீண்டகாலமாக புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வியட்னாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 200 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.