3 வாரங்களில் 2-வது மரண தண்டனை: சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் தூக்கிலிடப்பட்டார்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக சிங்கப்பூரில் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை அந்த நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். சிங்கப்பூரில் கடந்த 3 வார காலத்தில் நிறைவேற்றப்படும் 2-வது மரண தண்டனை இது. இந்த விவகாரம் உலக அளவில் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டில் சுமார் 1.5 கிலோ கஞ்சா கடத்தியதாக அந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 36 வயதான அந்த நபரின் பெயரை சிங்கப்பூர் அரசு வெளியிடவில்லை. அவரது குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில் தனியுரிமை சார்ந்து பெயர் அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உறுதி செய்துள்ளது. மரண தண்டனைக்கு தடை கோரிய அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக உலக அளவில் கடுமையான சட்டங்களைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் திகழ்கிறது. அந்த நாட்டின் சட்ட விதிகளின்படி சுமார் 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கப்படும்.

கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி சுமார் 500 கிலோ கஞ்சா கடத்திய குற்றத்திற்காக சிங்கப்பூரில் 46 வயதான தமிழர் தங்கராஜுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. சிங்கப்பூரில் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in