ஹபீஸ் சயீதை விடுதலை செய்ய லாகூர் உயர் நீதிமன்ற சீராய்வுக் குழு உத்தரவு

ஹபீஸ் சயீதை விடுதலை செய்ய லாகூர் உயர் நீதிமன்ற சீராய்வுக் குழு உத்தரவு
Updated on
1 min read

லாகூர் உயர் நீதிமன்றத்தின் சீராய்வுக்குழு வியாழனன்று ஜமாத் உத் தவா தலைவர் ஹஃபீஸ் சயீத், இவரது கூட்டாளிகள் 4 பேர், ஆகியோரை இம்மாதம் 26-ம் தேதி விடுவிக்க வேண்டும் என்று பஞ்சாப் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஏன் அக்டோபர் 26-ம் தேதி விடுவிக்க உத்தரவு என்றால், அவரைக் காவலில் வைக்க இம்மாதம் 25-ம் தேதி வரை பஞ்சாப் மாகாண அரசு நீட்டிப்பு பெற்றிருந்தது. எனவே 26-ம் தேதி ஹபீஸ் சயீத் மற்றும் 4 கூட்டாளிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐநா, இந்தியா ஆகியவற்றினால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத், லாகூர் உயர் நீதிமன்ற சீராய்வுக் குழு நீதிபதிகள் யவார் அலி, ஏபஸ் சமி கான், ஆலிய நீலம் ஆகியோர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை கேமராவில் படம் பிடிக்கப்பட்டது.

சயீத் வரும்போது அவருக்கு ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். பஞ்சாப் உள்துறை அதிகாரிகள் கூறியதைக் கேட்ட சீராய்வுக் குழு அக்டோபர் 26-ம் தேதிக்குள் ஹபீஸ் சயீத் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்ய அவகாசம் அளித்துள்ளது.

சனிக்கிழமையன்று சயீத் மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை அரசு திரும்பப் பெற்றது, ஆனால் பொது ஒழுங்குப் பராமரிப்பு என்ற சட்டப்பிரிவின் கீழ் அவரை மேலும் காவலில் நீட்டிக்க அனுமதி கோரியது, பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதே அவரைத் தற்போது விடுதலை செய்ய வழிவகை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in