தனி நாடு கோரும் கேட்டலோனியா தலைவர்களுக்கு ஸ்பெயின் கெடு

தனி நாடு கோரும் கேட்டலோனியா தலைவர்களுக்கு ஸ்பெயின் கெடு
Updated on
1 min read

தனிநாடு கோரும் கேட்டலோனியா தலைவர்கள் தங்கள் முடிவைக் கைவிட ஸ்பெயின் அரசு கெடு விதித்துள்ளது.

இது தொடர்பாக ஸ்பெயின் பிரதமர் மரியானோ புதன்கிழமை கூறும்போது, ''தனி நாடும் கோரும் கேட்டலோனியா தலைவர்கள் அவர்களின் முடிவைக் கைவிட எட்டு நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா விடுதலை பெற்று தனி நாடாகிவிட்டதாக  கேட்டலோனியா அதிபர் தன்னாட்சிப் பிரதேசத்தின் அதிபர் கார்லஸ் பூஜ்டியமோன் மற்றும் கேட்டலோனியா தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டனர்.

எனினும் தொடர்ந்து ஸ்பெயினுடன் நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக இந்த விடுதலைப் பிரகடனம் தற்காலிகமாக  நிறுத்திவைப்பதாக பூஜ்டியமோன் அறிவித்தார். இந்த நிலையில் ஸ்பெயின் தரப்பிலிருந்து சுதந்திர நாடு கோரும் கோரிக்கையை கேட்டலோனியா தலைவர்கள் கைவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள  கேட்டலோனியா மாகாணம் தன்னாட்சி பெற்ற மாகாணம் ஆகும்.ஸ்பெயினின்  பொருளாதாரத்தில் 20 சதவீதம் கேட்டலோனியாவின் பங்களிப்பு ஆகும்.

கடந்த 2008 பொருளாதார தேக்கநிலையின்போது கேட்டலோனியா கடுமையாக பாதிக்கப்பட்டது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. ஆனால் ஸ்பெயின் அரசு கேட்டலோனியாவின் வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. கேட்டலோனியா மாகாண மக்கள் கேட்டலான் என்ற மொழியைப் பேசுகின்றனர். அந்த மொழியை புறக்கணித்து ஸ்பானிஷ் மொழியை மட்டுமே பேச வேண்டும் என்று மத்திய அரசு நிர்பந்தம் செய்து வருகிறது. இதன் காரணமாக கிளர்ச்சி ஏற்பட்டு கடந்த அக்டோபர் 1-ம் தேதி கேட்டலோனியா தனி நாடு உரிமை கேட்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஒட்டுமொத்தமாக 20 லட்சத்து 26 ஆயிரம் பேர் வாக்களித்தனர். இதில் 90 சதவீதம் பேர் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in