

அணுசக்தி சோதனை வெடிப்புகளுக்கு எதிரான நெறிமுறையை மீறிக் கொண்டிருக்கும் ஒரே நாடு வட கொரியா என்று ஐ. நா பொது செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கூறியுள்ளார்.
வடகொரியா ஞாயிற்றுக்கிழமை 6-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியது.
வடகொரியாவின் இந்தச் செயலுக்கு தென் கொரியா, அமெரிக்கா, ரஷ்யா உட்பட உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில வடகொரியாவின் செயல் குறித்து ஐ. ந. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ்கூறும்போது, "வடகொரியாவின் செயல் அதன் அண்டை நாடுகளின் பாதுகாப்பை உறுதி தன்மையற்றதாக்கி உள்ளது.
அணுசக்தி சோதனை வெடிப்புகளுக்கு எதிரான நெறிமுறையை மீறிக் கொண்டிருக்கும் ஒரே நாடு வட கொரியா” என்றார்.
மேலும் ஐ. நா. அணுசக்தி முகமை தலைவர் கூறும்போது, ”வடகொரியாவின் செயல் வருந்தத்தக்கக் கூடியது” என்று தெரிவித்துள்ளார்.