அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலுக்கு போட்டியிடும் விவேக் ராமசாமியை பாராட்டிய ட்ரம்ப்

விவேக் ராமசாமி | கோப்புப்படம்
விவேக் ராமசாமி | கோப்புப்படம்
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும்.

குடியரசுக் கட்சியைச் சார்ந்த ட்ரம்ப் 2017 ஜனவரி முதல் 2021 ஜனவரி வரை அமெரிக்க அதிபராக பதவி வகித்தார். இந்நிலையில், மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலுக்கு அவர் விண்ணப்பித்துள்ளார்.

இந்திய வம்சாவளியினர்

இந்த வேட்பாளர் தேர்தலுக்கு அக்கட்சியைச் சேர்ந்த முக்கியத்தலைவர்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியும் (37) ஒருவர். மற்றொரு இந்திய வம்சாவளியினரான நிக்கி ஹாலேயும் அதிபர் வேட்பாளர் தேர்தலுக்கு விண்ணப்பித்திருக்கிறார்.

இந்நிலையில், “விவேக் ராமசாமி எனக்குப் பிடித்தமானவர். அவரைப் பற்றி சொல்ல நல்ல விஷயங்களே உள்ளன. சமீபத்திய அதிபர் வேட்பாளர் தேர்தலில் அவர் சிறப்பாக செயல்பட்டார். ‘அதிபர் ட்ரம்ப்’ குறித்தும் ட்ரம்ப் நிர்வாகம் குறித்தும் அவர் நல்ல விஷயங்களை மட்டும் சொல்லக்கூடியவர். அதுதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது. அதனால்தான் அவர் சிறப்பாக செயல்படுகிறார்” என்று டொனால்டு ட்ரம்ப் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in