காஸாவில் ஐ.நா. பள்ளி வளாகம் தாக்குதல்: அமெரிக்கா கண்டனம்

காஸாவில் ஐ.நா. பள்ளி வளாகம் தாக்குதல்: அமெரிக்கா கண்டனம்
Updated on
1 min read

தொடர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் தங்கியிருந்த ஐ. நா பள்ளி வளாகம் மீதான தாக்குதலை அமெரிக்கா கடுமையாக கண்டித்துள்ளது. அதே சமயம் இஸ்ரேல் மீது குற்றம்சாட்டு கூறுவதை அமெரிக்கா தவிர்த்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில், தற்காலிக போர் நிறுத்தத்திற்கு பிறகு, ஐ. நா பள்ளி வளாகம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய குண்டு வீச்சில், அந்த பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருந்த குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பாலஸ்தீன மக்கள் மற்றும் ஐ. நா உதவி மைய அதிகாரிகள் என 16 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும், இதில் 40- க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் எரிக் ஷூல்ட்ஸ், "காஸாவில் உள்ள ஐ நா பள்ளி வளாகத்தில், நடத்தப்பட்ட குண்டு வீச்சில் பாலஸ்தீன மக்கள் பரிதாபமாக இறந்துள்ளனர். ஐ.நா உதவி மையங்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் தங்குவது பாதுகாப்பானதாக இல்லை, ஆகவே உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ள பாலஸ்தீனர்கள், பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற இஸ்ரேலின் வலியுறுத்தல் பின்பற்றப்படவில்லை என்பது கவலை அளிக்கிறது" என்று அவர்கள் கூறியதாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஷூல்ட்ஸ், மற்றும் வெள்ளை மாளிகை பிரதிநிதி மேரி ஹார்ப் ஆகியோர், செய்தியாளர்களிடம் பேசும்போது, குண்டு வீச்சுக்கு இஸ்ரேல் மீது குற்றம்சாட்டுவதை தவிர்த்ததாகவும், தாக்குதல் குறித்து முழுமையான மற்றும் உடனடியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in