

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசியதாவது:
மலேசிய விமான சம்பவம் விபத்தல்ல; குற்றம். இதற்குக் காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜுலி பிஷப், ஆஸ்திரேலியாவுக்கான ரஷ்ய தூதரைச் சந்தித்தார். ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு உக்ரைனில்தான் இச்சம்பவம் நிகழ்ந்தது என்ற அடிப்படையில் இச்சந்திப்பு நடந்தது.
ரஷ்ய தூதர், உக்ரைன் மீது பழிசுமத்துகிறார். இது மிகக் கடுமையாக அதிருப்தியளிக்கிறது. இதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என ரஷ்யா கூறுகிறது. மலேசிய விமானம் தானாக கீழே விழவில்லை; சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் விழுந்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்புக் குழு இச்சம்பவம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும். கருப்புப்பெட்டியைக் கைப்பற்ற வேண்டும். குற்றமிழைத்தவர்கள் அடையாளம் காணப்படவேண்டும். இந்த நாள் ஆஸ்திரேலியாவுக்கும், உலகுக்கும் மோசமான நாள். உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.-பிடிஐ