Published : 07 Sep 2017 10:22 AM
Last Updated : 07 Sep 2017 10:22 AM

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர்

இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டரை (62) நியமித்துள்ளார் அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

இந்த நியமனம் தொடர்பான பரிந்துரை நாடாளுமன்ற செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அங்கு விவாதிக்கப்பட்டு நியமனம் உறுதி செய்யப்படும்.

இந்தியாவில் அமெரிக்க தூதராகப் பணியாற்றிய ரிச்சர்டு வர்மாவின் பதவிக் காலம் கடந்த ஜனவரி 20-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்பிறகு ஏழு மாதங்களாகியும் புதிய தூதர் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் அமெரிக்க அதிபரின் வெளிநாட்டு பொருளாதார விவகாரத் துறை மூத்த அதிகாரியாக பணியாற்றி வரும் கென்னத் ஜஸ்டரை இந்தியாவுக்கான தூதராக அதிபர் டொனால்டு ட்ரம்ப் நியமித்துள்ளார். இவர் இந்தியா, அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாக முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x